Links

தலைவா!!!

என் வாழ்வில் தலைவருடன் சில மறக்க முடியாத அனுபவங்கள் !!!!

மூன்றாம் உலகம்

பலர் வாழ்வில் தவற விட்ட, தவிக்க விட்ட ஒரு உலகம்.... எனது இரண்டாவது சிறுகதை!!!

Exams, Sleep and Many more.....

A small journey into the unavoidable world of exams and evaluations.....

பயணம் - பகுதி 1

சில பயணங்கள் நம் வாழ்க்கை பயணத்தை முடிவு செய்யும் .... தமிழில் சிறுகதை புனைய நான் மேற்கொண்ட முதல் முயற்சி !!!

WHAT IS GOD!!!

For people who are searching who and where is God, this question might give some answers.....

POSTIVE, NEGATIVE, and NEUTRAL

Is the essence of our lives woven among these three factors? in continuation to post on IS IT A SIN TO BE BAD ?.....

IS IT A SIN TO BE BAD ?

Is doing bad things in life a part of our configuration or is it necessary to have bad things in life .....

IPL - A RAT RACE ?

Is IPL worth the hype it claims being the most competetive tournament or its just a RAT Race .....

சென்னையில் ஒரு விடுமுறைக்காலம்

Dedicated to all Engineers from Chennai who are breaking their heads out in an MNC in Bangalore...

Saturday, February 18, 2012

மூன்றாம் உலகம் - இறுதிப் பகுதி


மதியம் 1:30 PM இடம் : மெஸ் ஹால் அருகில்
சாப்பிட எதுவும் மனமில்லாமல் மெஸ்ஸில் இருந்து வெளியே சென்றுகொண்டிருந்தேன். நான் மெஸ் வந்ததே ஹரிதாவை பார்க்க தான். அவளை அங்கும் பார்க்க முடியாததால் இனி அங்கே இருந்து ஒரு பயனுமில்லை என நினைத்து மெஸ்ஸில் இருந்து வெளியே வந்தேன்.

நான் வெளியே வர தூரத்தில் அவள் மெஸ் நோக்கி வந்துகொண்டிருந்தாள். அவளை நோக்கி நான் செல்ல என்னை பார்த்து லேசாக சிரித்தாள், கடந்த இரண்டு நாட்களாக எனக்கு இருந்த குழப்பம் தலைவலி, எல்லாம் இந்த ஒரு புன்னகையில் மறைந்தது. என் அருகில் வரும் போது தலையை லேசாக சாய்த்து புருவங்களை லேசாக உயர்த்தியபடி என்னை பார்க்க எனக்கோ "இது என்ன புது expression இதுக்கு பின்னாடி என்ன அர்த்தம் இருக்கோ தெரியலேயே" என தோன்றியது

என்னை பார்த்து " u ok now" என கேட்க

நானோ சாதரணமாக பதில் கூறாமல் "எனக்கென்ன im always fine" என பதிலளித்தேன்

"always...சாப்பிட்டாச்சா" என கேட்டாள்

"இல்லை வயிறு சரியில்லை.. not well" என்றேன்

"இதுதான் always fineனுக்கு அர்த்தம்மா சரி அப்போ மெஸ் பக்கத்துல என்ன பண்ற"

என்னடா ஒபெநிங்க்லேயே இப்படி கேட் போடுறா, தலைய லேசா சாய்க்கும் போதே டவுட் ஆனேன், மெஸ்ல நீ இருக்கியான்னு பார்க்க தான் வந்தேன் என கூறலாம் என நினைத்தேன் ஆனால் "இல்ல மோர் எதாவது வச்சுருப்பாங்கன்னு நினச்சேன் ஆனா எதுவுமே இல்ல அதே மொக்கை லஞ்ச்..." என கூறியபடி "நீ இன்னும் சாப்பிடல" என்று கேட்டேன்

"எனக்கு இந்த சாப்பாடே பிடிக்கல....காபெடீரியாவுல தான் ஏதாவது சாப்பிடனும், நீயும் வா have something" என கூற இருவரும் காபெடீரியா சென்றோம்.

இருவரும் காபெடீரியாவில் அமர என் அருகே சிலர் சத்தமாக ஏதோ பேசிகொண்டிருக்க எனக்கோ அந்த விஷயங்களில் எதுவும் காதில் விழவில்லை.

"என்ன ஆச்சு உடம்பு சரியில்லன்னு சொன்ன... நேத்து மெஸ்ல ஏதாவது சாப்பிட்டியா ?" என அவள் கேட்க

"நேத்து சாப்பிட்டதால வந்த பிரச்னை இல்லை, அன்னைக்கி பார்ட்டில ...." என நான் இழுக்க

" அதுதான் விஷயமா ? நீ பார்ட்டில பண்ணின விஷயத்துக்கு கண்டிப்பா இது மாதிரியெல்லாம் நடக்கும்"

"நான் அப்படி ஒன்னும் பெருசா பண்ணலையே" என நான் கூற

"ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்காதஎன லேசான கோபத்துடன் அவள் கூற. இதற்கு மேல் மேலோட்டமாக பேசுவதில் எந்த பயனுமில்லை என நினைத்தேன். அதற்கு பிறகு நான் என்ன பேசினேன் என்பது இன்று வரை எனக்கே விளங்கவில்லை

"ஓகே ஒபெனாவே சொல்றேன் அன்னைக்கி தண்ணி கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடுச்சி.. நானே அப்படி behave பண்ணுவேன்னு எதிர் பார்க்கல, போதாத குறைக்கு நீ வேறே என் கூட இருந்துருக்க சில நேரம் உன் தோளில சாஞ்ச மாதிரியும், ரோஜா பூவை வச்சுக்கிட்டு ஏதோ பேசின மாதிரி தோணுது. சத்தியமா இப்போ வரைக்கும் நான் என்ன பேசினேன் என்ன பண்ணினேன் எதுவுமே எனக்கு ஞாபகமில்லை. நான் எதாவது தப்பா பேசி இருந்தாலோ that was purely because of drinks. நான் எதவது தப்பா நடந்திருந்தா im extremely sorry தயவுசெஞ்சு நான் உளறினது எல்லாத்தையும் மறந்துடு"

சில வினாடிகள் அவள் எதுவுமே பேசவில்லை, தலை குனிந்தபடி "எதை நீ மறக்க சொல்ற, இப்போ வரைக்கும் நீ பண்ணினது தப்புன்னு நான் சொன்னேன்னா?"

குனிந்திருந்ததால் அவள் முகம் எனக்கு தெரியவில்லை, ஆனால் அவள் குரலில் ஒரு சோகம் தெரிந்தது, எனக்கு என்ன செய்வதென்றே புரியாமல் "ஹே என்ன ஆச்சு, உன் குரல் ஏன் இப்படி அழுவுற மாதிரி.. நான் அன்னைக்கி ஏதாவது ரொம்ப தப்பா நடந்துகிட்டேனா?" என கூறியபடி அவள் முகத்தை பார்க்க முயற்சி செய்தேன்.

"தயவு செஞ்சு என் முகத்தை பார்க்காத... அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..." என்றாள். எனக்கோ என்ன செய்வதென்று புரியாமல் அமைதியாக இருக்க அவள் அதே சோகம் ததும்பிய குரலில் தொடர்ந்தாள்

"நீ சொன்னதெல்லாம் உண்மைன்னு நினைச்சு எவ்வளோ சந்தோஷமா இருந்தேன் தெரியுமா? இன்னக்கி நீ வந்து தண்ணி அடிச்சுட்டு நான் உளறிட்டேன் அப்படின்னு சொல்ற நீ எப்போ உளறுவ எப்போ உண்மை பேசுவேன்னு எனக்கு எப்படி ...." என்று கூறியபடி தலை நிமிர்ந்தாள்.

எனக்கோ ஆச்சரியம் தாங்க முடியவில்லை, அவள் குரலில் மட்டுமே சோகம் இருந்தது ஆனால் முகமோ எப்போதையும் விட பிரகாசமாய் இருந்தது, என்னை பார்த்து சிரித்தபடி "பேக்கு!!! போய்முகத்த கண்ணாடில பாரு சொன்னதெல்லாம் நம்பிட்டல்ல.... ஏப்ரல் பூல் !!!!" என்றாள் சத்தமாக

"இன்னைக்கி ஏப்ரல் பர்ஸ்டா?" என நான் குழப்பத்துடன் கேட்க (என்னை போல் பல்பு வாங்கியவர்கள் இக்கதையின் முதல் பாகத்தின் முதல் வரியை மீண்டும் படிக்கவும்)... அவள் போட்ட சத்தத்தில் காபிடேரியாவில் அருகில் சத்தம் போட்டு கொண்டிருந்த அந்த வட இந்திய மாணவர் குழு என் அருகில் வந்து சத்தம் போட, எனக்கோ என்னை சுற்றி என்ன நடக்கிறது என புரியாமல், அவள் சொன்னதுபோல் ஒரு பேக்கு மாதிரி பப்பரபே என முழிதுக்கொண்டிருந்தேன்.

அந்த கரகோஷதிற்கு மத்தியில் நான் அவளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன், பலமான அந்த சிரிப்பு லேசாக மங்கி ஒரு புன்னகையை நோக்கி சென்று கொண்டிருந்தது, சிரிப்பு மங்கினாலும் அழகு மங்கவில்லை.

"ஒரு ஏப்ரல் பூல் பண்றதுக்கா இவ இவ்வளவு நாடகம் ஆடினா ? என்னை முட்டாள் ஆக்குறதுக்கு இவளுக்கு இதை விட்டா வேற எந்த டாப்பிக்கும் கிடைக்கலையா?.".. என் சிந்தனைகள் இந்த கேள்விகளில் மூழ்க ஆரம்பிக்கும் போது ஒரு குரல்..... ஆம் இத்தனை நாளாக என்னுள் தோல்வியை கண்ட ஆழ்மனத்தின் குரல்

"கேள்விகேட்டது, யோசித்தது, முடிவெடுத்தது எல்லாம் போதும், இந்த கேள்விக்கு பதில் உன்னிடமில்லை, யாரிடம் இருக்கிறது என்பது உனக்கே தெரியும்"

என்னை சுற்றியிருந்த கரகோஷம் முடிந்தது, என் நிலைமையை நினைத்து என்னால் சிரிக்க மட்டுமே முடிந்தது, அதே சிரிப்புடன் அவளை பார்க்க அவளிடம் இருந்து ஒரு புன்னகை மட்டுமே பதிலாக வந்தது. ஆனால் அந்த புன்னகையில் இன்று ஒரு வித்தியாசம்- என்னை வென்று விட்ட லேசான திமிரும் அவளிடம் இது வரை நான் கண்டிராத ஒரு விஷயமும் தென்பட்டது, தமிழ் இலக்கியங்களில் ஏறக்குறைய எல்லா பெண்களும் வெளிப்படுத்தும் நாணம். எந்த ஒரு பெண்ணும் இதுநாள் வரை என்முன் இப்படி நின்றதில்லை, இது தான் இத்தனை வருடமாக ஆண் சமுகத்தை கட்டி போட்டு பல கவிதைகள் எழுத வைத்த காரணமா ?. இனிமேல் நான் அவளின் நண்பன் இல்லை என்பது தெளிவானது.
"நான் மது அருந்தி ஆரம்பித்த காரியத்தை
அவள் மதி நுட்பத்தால் முறியடித்தாள்"



என் இருக்கையை விட்டு எழுந்தேன் "உன்னை பொறுத்த வரை நீ சொன்னது ஏப்ரல் பூல் விளையாட்டா இருக்கலாம், ஆனா நான் இத்தனை நாளா சொல்ல ..." இந்த மாதிரி மொக்கை பஞ்ச் டயலாக் பேசி அந்த அற்புதமான உணர்வை பாழாக்க வேண்டாம் என தோன்றியது. இந்த புன்னகையை இன்றோடு இழக்க விரும்பவில்லை, என் மனதில் ஓடும் எண்ணங்கள் அவளுக்கு தெரிந்தாலும் அவள் மனதின் ஓசைகள் எனக்கு கேட்டாலும் நான் இப்போது செவிடனாக இருக்கவே விரும்புகிறேன். நண்பனாக இருந்து பதவிஉயர்வு வாங்கிய எனக்கு அந்த வேலையில் உடனே செல்ல விருப்பமில்லை. என்றாவது ஒரு நாள்... அது நாளையாகவும் இருக்கலாம் அடுத்த மாதமாகவும் இருக்கலாம்.  ஏன்? என கேட்பவர்கள்

பள்ளியில்
பரீட்சைக்கு படித்திருக்கலாம்
படித்தபின்
பரீட்சை எழுதியிருக்கலாம்

ஆனால்
நடுவில்
பரீட்சைக்கு முன் இருக்கும் எதிர்பார்ப்பை அனுபவித்ததுண்டா ?

விமானத்தை
ஆகாயத்தில் பார்த்திருக்கலாம்
சிலநேரம்
பூமியிலும் பார்த்திருக்கலாம்

ஆனால்
இது இரண்டிற்கு நடுவில்
பூமியிலிருந்து வானம் செல்லும் வேகத்தை அனுபவித்ததுண்டா ?


ஒரு பெண்ணிடம்
நண்பனாக இருக்கலாம்
நண்பனானபின்
காதலனாக இருக்கலாம்

ஆனால்
இது இரண்டுமில்லாத ஒரு மூன்றாம் உலகத்தை கண்டதுண்டா ?

ஹரிதாவின் புன்னகை என்னை அவ்வுலகில் கொண்டு சென்றது... அங்கிருந்து வர எனக்கு விருப்பமில்லை, நண்பனுமில்லாமல் காதலனுமில்லாமல் தினம் தினம் எனக்கு இந்த புன்னகை வேண்டும் என தோன்றியது. மனதின் கதவு இன்று துறக்கும், நாளை துறக்கும் என்ற எதிர்பார்ப்புடன் எங்கள் இருவருகுள்ளே நேரம் கழிய வேண்டும் உலகில் பல காதலர்கள் அவசரப்பட்டு செல்லும் அடுத்த நிலைக்கு உடனே எனக்கு செல்ல ஆவலில்லை. சுருக்கமாக சொல்ல போனால்
"அவள் புன்னகையில் இருந்த போதை எனக்கு பிடித்திருக்கிறது"

என் மூன்றாம் உலகம்... ஆரம்பம் ….



References
The Hangover (English - 2009) by Todd Philips
Mankatha (Tamil - 2011) by Venkat Prabhu

பின்குறிப்பு
இக்கதையில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே. இது என் இரண்டாவது சிறுகதை இக்கதை உங்களுக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் உங்கள் கருத்துகளை தாராளமாக தெரிவிக்கவும்ஆனால் "மச்சான் யாருடா அந்த பொண்ணு?" என தயவு செய்து  கேட்க வேண்டாம்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More