என் ஞாபகங்கள் பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது, சுமார் எட்டு மாதங்களுக்கு முன்னால் நான் இந்த இடத்திற்கு வந்ததும் அவளை முதல் முறையாக ஹாஸ்டல் மெஸ்ஸில் பார்த்ததும் ஞாபகம் வர ஆரம்பித்தது
15 June 2010
முதல் முறையாக இந்த கல்லூரியில் கால் எடுத்து வைக்கிறேன்... இத்தனை நாளாக தமிழ்நாட்டை விட்டு வேறு எங்கும் செல்லாத நான் முதல் முறையாக பெங்களூரில் ஒரு B-ஸ்கூலில் படி எடுத்து வைக்கிறேன். பல நுழைவுத்தேர்வுகள் எழுதி பல நேர்காணல்களில் கிழித்து எடுத்த என்னையும் ஒரு மனிதனாக மதித்து MBA படிக்க அழைப்பு கொடுத்த ஒரே நல்ல கல்லூரி இதுதான்.
இந்த B ஸ்கூல் பற்றி சில தகவல்கள், இந்தியாவில் எல்லா விதமான இடத்தில் பார்க்கும் நம் தமிழ் மக்களை இந்த B-ஸ்கூலில் மட்டும் பார்ப்பது கடினம், எங்கு பார்த்தாலும் வட இந்திய காற்று வீசும், இதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை என்றாலும் முதல் முறையாக இப்படி ஒரு சூழலில் எப்படி சமாளிப்பது என்பதை பற்றி யோசிக்க வேண்டியிருந்தது. எனக்கு இருந்த ஒரே ஒரு தன்னம்பிக்கை நான் தட்டு தடுமாறி " ek gauum
mein ek kisan ragu thaatha" என இந்தியில் பிச்சு உதறுவேன்.
அது போக இந்த கல்லூரி பெங்களூரில் இருபதால் கண்டிப்பாக நம் மக்கள் கணிசமான அளவில் இருப்பார்கள் என நம்பினேன். IIM Calcutta விலும்
IIT Bombay விலும் படிக்கும் என் நண்பர்கள் " மச்சான் எங்க காலேஜ்ல கிட்ட தட்ட ஒரு இருபது பேர் இருக்காங்க டா, கண்டிப்பா பெங்களுர்ல பல பேர் இருப்பாங்க அத பத்தியெல்லாம் கவலை படாத" என்ற உற்சாக பேச்சு மேலும் எனக்கு நம்பிக்கையை தந்தது.
இந்த உற்சாகம் கல்லூரி வந்த சில நிமிடங்களில் உடைந்தது. ஆம்!!! வந்து சேர்ந்த இந்த ஒரு நாளில் தமிழ்நாட்டை சேர்ந்த எவரையும் பார்க்கவில்லை. இந்தி லேசாக தெரிந்தாலும் ஏனோ அந்த மொழியில் சரளமாக பேச என்னால் முடியாது, தட்டு தடுமாறி பேசி அந்த மொழியை கொலை செய்வதற்கு பதில் அதில் பேசாமல் இருப்பதே உத்தமம் என முடிவெடுத்தேன். வட மொழியை கைவிட்டு உலக மொழியை பின்பற்றினேன். என் batch இல் என்னையும் கோயம்புத்தூர் கார்த்திக் யும் தவிர தமிழ் மக்கள் யாரையும் காணவில்லை. இந்த கார்த்திக், ஆம்!!!
பார்ட்டியில் எனக்கு சரக்கு கொடுத்த அதே கார்த்திக் , அவனை பற்றி மூன்றே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் "இவன் ஊர் கோயம்புத்தூர்", அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கே உரிய குசும்பு, லேசான திமுரு, கோபம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒருவன். நம்மள போலவே இந்தி தெரியாத ஒருத்தன் மாட்டிகிட்டான் என சந்தோசபட்ட எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி.
"மச்சி இந்தி நல்லா பேசுவேன் டா" என்று கார்த்திக் சொன்னது எனக்கு தூக்கி வாரி போட்டது,
"ஸ்கூல்ல படிச்சது டா... அப்புறும் கொஞ்ச நாள் பெங்களூர்ல இருந்தனா அப்போ கத்துகிட்டது, லேசா கன்னடம், தெலுங்கு கூட தெரியும் டா "
தனியா ஒரு தீவுல மாட்டிகிட்டேனே... துணைக்கு கூட இவனும் வருவான்னு பார்த்தா, இன்னும் ரெண்டு வருஷம் தனியா என்ன பண்றது என யோசித்துக்கொண்டே மெஸ்ஸில் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.
இந்த மெஸ் உணவு பற்றி சொல்லியே தீர வேண்டும், இந்த மெஸ்ஸில் சாப்பிடும் வட இந்திய மாணவர்கள் இது தென்னிந்திய உணவு என நினைப்பார்கள், தென் இந்தியர்களுக்கோ இது வட இந்திய உணவு என்று தோன்றும்... ஆனால் வடக்கும் இல்லாமல் தெற்கும் இல்லாமல் எதோ ஒரு மார்க்கமாக சமைத்த உணவு. உலகில் யாரும் பார்க்காத சில உணவு வகைகள் இந்த மெஸ்ஸில் மட்டுமே கிடைக்கும். அதாவது நேற்று சமைக்கும் போது மீந்து போன காய் கறிகளை ஒன்றாக போட்டு ஏதோ ஒரு குருமா என்று கொடுப்பார்கள். அதை சாப்பிடுவதை விட சாப்பிடாமல் இருந்தால் ஆரோக்கியம் நிச்சயம்.
இவ்வாறாக இடமும் சரியில்லை சாப்பாடும் சரியில்லை என நினைத்துக்கொண்டிருந்த போது தான் முதல் முறையாக அவளை மெஸ்ஸில் பார்த்தேன். ஜீன்ஸ் பேண்ட்டும் டி ஷர்ட்டும் போட்டுக்கொண்டு உலாவி கொண்டிருக்கும் பெண்கள் மத்தியில், அழகான வெள்ளை சல்வாரில் வந்த அவள் என கண்களை கவரவில்லை என்றால் நான் குருடன் என்றே சொல்ல வேண்டும்.
செல்போனில் ஏதோ மெசேஜ் செய்துகொண்டே என் அருகில் வந்து புத்தகங்களை வைத்துவிட்டு அவள் உணவை எடுக்க சென்றாள். அவள் உடையை விட என்னை கவர்ந்த விஷயம் அவள் முகம் ஆம் வட இந்திய முகமல்ல நம் சென்னை மாநகரில் தினம் தினம் பார்க்கும் ஒரு அழகான தமிழ் முகம். சென்னையில் சத்யம் தியேட்டரிலும், எக்ஸ்பிரஸ் அவேன்யுவிலும் எத்தனையோ நாள் இந்த வட இந்திய பெண்களை ரசித்ததுண்டு, அந்த பெண்களை போல பலர் இந்த கல்லூரியில் இருந்தாலும் அவர்களை எல்லாரையும் தூக்கி சாப்பிடும் ஓர் அழகி என் அருகில் வந்து வந்து அமர்ந்தாள்.
"பேச்சுத்துணைக்கு ஆள் தேடிகொண்டிருந்த எனக்கு ஆண்டவன் வாழ்க்கைத்துணைக்கு ஆள் அனுப்பிவைத்தான்"
எனக்கு எதிரே இரு இருக்கைகள் தள்ளி அமர்ந்தாள், அவளை மீண்டும் ஒரு முறை பார்த்தேன், செல்போனில் மெசேஜ் செய்து கொண்டே சப்பாத்தியை சாப்பிட ஆரம்பித்தாள். இதயம் அவளை ரசித்தபோது மூளை அவளை ஆராய ஆரம்பித்தது. நான் எனக்குள்ளே பேச ஆரம்பித்தேன்
"கண்டிப்பா north கிடையாது, ஒரு வேளை பெங்களூர் பொண்ணா இருக்குமோ, ஏற்கனேவே இவங்களுக்கும் நமக்கும் வாய்க்கால் தகராறு, எப்படி பேசுறது" என யோசிக்கும் போது இன்னொரு சந்தேகம் கிளம்பியது
"ஒரு வேளை ஆந்திரா கேரளா.... ஆகா எல்லா இடத்துலயும் நமக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கே" என யோசிக்க ஆரம்பித்தேன்
நான் பாட்டுக்கு அந்த பெண்ணிடம் தமிழில் பேச அவள் ஏதோ வேற்று கிரக மனிதனை போல் பார்த்துவிட்டால் என்ன செய்வது என சிந்ததபோது
"சரி மொதல்ல தமிழானு check பண்ணிடுவோம்" என முடிவெடுத்தேன். எப்படி கண்டுபிடிக்கிறது என யோசித்தபோது என செல்போன் என கண்ணில் பட்டது. தலையில் ஒரு ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது.
செல்போனை எடுத்தேன் ரொம்ப நாளாக வைத்திருந்த அந்த காட்பாதர் வயலின் ட்யுனை மாற்ற தொடங்கினேன். என்ன டியுன் வைக்கலாம் என செல்போனில் பார்த்தேன்.. விண்ணைத்தாண்டி வருவாயாவின் "ஹோசானா" பாடல் கண்ணில் பட்டது. ஆகா இது தான் situation ஸாங் என முடிவெடுத்தேன், Nino Rota வின் வயலின் ரஹ்மானின் ஹோசானாவிற்கு வழி விட்டது. யாருக்கு மிஸ்டு கால் பண்ணினா திருப்பி பண்ணுவாங்கன்னு யோசித்தேன், அம்மாவை தவிர வேறு யாருக்கும் என மேல் இவ்வளவு அக்கறை கிடையாது. சென்னையில் வீட்டிற்கு டயல் செய்தேன், அம்மா போனை எடுத்தவுடன் கட் செய்தேன். எப்படியும் அம்மாவிடமிருந்து கால் வரும் என்ற நம்பிக்கையில் செல்போனை வெளியே வைத்தேன். இரண்டு மூன்று நிமிடங்கள் ஆகியும் எந்த செல்போனில் எந்த அழைப்பும் வரவில்லை. அம்மா மட்டும் தான் என் மிஸ்டு காலுக்கு மதிப்பு கொடுப்பாள் என நினைத்த எனக்கு அந்த தாமதம் தவிக்க வைத்தது. ஆனால் தாமதம் ஆனதே தவிர கால் வராமல் இல்லை. ஐந்து நிமிடங்களில் அழைப்பு வந்தது. என் செல்போன் ஒலிக்க ஆரம்பித்தது "என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே..."
நான் செல்போனை பார்த்தேன் அவளை பார்த்தேன் அவள் என்னை பார்த்தாள் என் செல்போனை பார்த்தாள், கம்ப்யூட்டர்ரில் ஒரு சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்தால் ஒரு progress bar ஓடுவதை போல் என் மனதில் ஓட ஆரம்பித்தது. [||||10 % தமிழ்]
செல்போனை எடுத்தேன் மறுமுனையில் அம்மா " என்னடா கால் கட் ஆயிடிச்சு"
"தெரியிலமா சிக்னல் சரியில்ல" என பதில் சொல்லிக்கொண்டே அவளை பார்த்தேன், அவள் மீண்டும் என்னை பார்த்தாள் [||||||||||||||25 % தமிழ் ]
"சாப்பிட்டியா? ஹாஸ்டல் எப்படி இருக்கு, தமிழ் பசங்க யாராவது இருக்காங்களா?"
"நம்ம ஊரு ஆளுங்க யாருமே இல்லமா.... நானும் இன்னொரு பையனும் தான் இருக்கோம்" ... அவள் என்னை பார்க்க வில்லை ஆனால் நான் பேசுவதை கேட்டுக்கொண்டிருகிறாள் என புரிந்தது [|||||||||||||||||||||50 % தமிழ்]
"சரி என்ன சாப்பாடு எப்படி இருக்கு?"
"என்னத்த சொல்ல சாம்பார்ல காபிய விட சர்க்கரை கொஞ்சம் கம்மி... ரசம் அது விஷம் மாதிரி இருக்கு." நான் சொல்லும்போதே அவள் லேசாக சிரிக்க ஆரம்பித்தாள் [||||||||||||||||||||||||||||||||||75
% complete தமிழ்]
நான் பேச்சை தொடர்ந்தேன் "எப்படித்தான் மூணு வேளையும் சப்பாத்தி சாப்பிடுறான்கனே புரியல.. இந்த சப்பாத்திய சாப்பிடுறதுக்கு தூக்கு மாட்டிட்டு சாவலாம்" என சொல்லி முடிக்கவும் அவள் என்னை லேசாக முறைக்கவும் சரியாக இருந்தது. மனதில் ஓடிய progress bar ஓடி முடிந்தது [|||||||||||||||||||||||||||||||||||||100
%complete தமிழ்]
லேசான நிம்மதி, அவளும் தமிழ் தான் என்பதில், இன்னொரு நிம்மதி என்னை போன்ற தமிழ் பசங்க வேறு யாரும் இல்லை என்பதில் (கார்த்திக்கை தவிர), ஸ்கூலிலும், இன்ஜினியரிங் காலேஜிலும் செம ரகளையான காங்கில் சேர்ந்து எந்த ஒரு ரோமன்சிலும் ஈடுபடாத எனக்கு இது ஒரு வரமாக தெரிந்தது. சரி நம்ம தமிழுன்னு அந்த பொண்ணுக்கு புரிய வச்சுட்டோம், எப்படி பேச்சை ஆரம்பிக்கிறது, "ஹாய் ஹலோ"
சொல்லி ஆரம்பிப்போமா..... இல்ல..... வேற எதாவது நெத்தியில அடிச்சா மாதிரி opening வேணும் என முடிவெடுத்தேன்
Opening கிடைத்தது.. என் செல் போன் மூலமாக. மீண்டும் ஒரு கால் இந்த முறை கார்த்திக். செல்போனை எடுத்தேன்
கார்த்திக் சற்று கோபத்துடன் "டேய் எங்கடா இருக்க!!!"
"இங்கதாண்டா மெஸ்ல இருக்கேன்... நீ எங்க இருக்கே"
"டேய் பக்கி...
சொல்லி இருக்குலாமுல நான் இப்போ தான் மெஸ்ஸுகுள்ள வந்துகிட்டிருக்கேன்..."
திரும்பி பார்த்தேன் கார்த்திக் உள்ளே வந்துகொண்டிருந்தான், அவனை பார்த்து கை அசைத்தேன். அவன் கண்ணில் நான் தென்படவில்லை.
"டேய் எங்கடா இருக்கே.." என்றான்
கார்த்திக்கின் இந்த கேள்வி தான் நான் தேடிகொண்டிருந்த opening ,
"டேய் அப்படியே நாலாவது row பாரு.. அங்க ஒரு வெள்ளை டிரஸ் போட்டுக்கிட்டு ஒரு சூப்பர் பிகர் இருக்கு தெரியுதா.. அந்த பொண்ணுக்கு நேர் opposite ல உட்காந்திருக்கேன் பார்"
சொல்லி முடித்தவுடன் அவளை பார்த்தேன். ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் HeadShot தமிழில் நெத்தியடி, இப்போது என்னை நன்றாகவே முறைத்து பார்த்தாள். பொண்ணுங்க எல்லாம் நம்மள இப்படி பார்த்தா தான் உண்டு, நார்மலா இருந்த எங்க பாக்குறாங்க,அவளை கலாய்த்துவிட்ட குதுகலத்துடன் அவளை மீண்டும் பார்த்தேன்.
என்னை பார்த்துக்கொண்டே செல்போனை எடுத்தாள், "ஆகா என்னடா நம்ம வித்தையே நமக்கே ரிபீட் பண்றா" என்ற யோசனையில் நான் இருக்க
"டேய் எங்க இருக்கே... எத்தன வாட்டி போன் பண்றது" என சத்தமாக பேச ஆரம்பித்தாள்.
எனக்கு புரிந்துவிட்டது "டேய் ஒழுங்கா நடிச்சுரு.. அவ கிட்ட இருந்து response வர ஆரம்பிச்ருச்சு" என மனதுக்குள் சொல்லிகொண்டேன். அவள் தமிழ் என்பது எனக்கு தெரியாதது போலவும், அது தெரியாமல் தாறுமாறாக பேசி பல்பு வாங்கியது போலவும் ஒரு கணம் அவளை பார்த்தேன். அவள் லேசாக சிரித்தாள், பசங்க பல்பு வாங்குறதுல இந்த பொண்ணுங்களுக்கு எவ்வளோ சந்தோசம் என எண்ணிக்கொண்டு அவளை பார்த்தேன் அந்த புன்னகை இன்னும் மறையவில்லை.இந்த புன்னகைக்காக எவ்வளவு வாட்ஸ் பல்பு வேண்டுமானாலும் வாங்கலாம் என சிரித்துக்கொண்டே மெஸ்ஸில் இருந்து கிளம்பினேன்.
"அணு உலையின் கதிர்வீச்சை விட பல மடங்கு சக்திவாய்ந்தது அவள் புன்னகை" மனதிற்குள்ளே இந்த எண்ணத்துடன் academic பிளாக் சென்றேன், என் வகுப்பு நான்காவது மாடி. லிப்டில் செல்ல தயாரானேன் என்னுடன் இரு இரெண்டாம் ஆண்டு மாணவர்களுடன் லிப்ட் கிளம்ப தயாரான போது மீண்டும் அவள் ப்ரேவேசம். இரெண்டாம் மாடியில் மற்ற இரு மாணவர்கள் இறங்க.நானும் அவளும் தனியே பயணிக்க ஆரம்பித்தோம்.
"இதை விட நல்ல சான்ஸ் கிடைக்காது டா " மனச்சாட்சி என்னை உறுத்த முதல் முறையாக பேச ஆரம்பித்தேன்
"நீங்க தமிழா?"
என்றேன்
"ஆமா எப்படி தெரியும்"
"இல்ல மெஸ்ல போன்ல சத்தமா பேசிக்கிடிருந்தீங்க" என்றேன்
"ஓ!! நீங்க போன்ல பேசுனதையும் நான் கேட்டேன்" என்றாள் லேசாக முறைத்தபடி
"ஓகே !! கேட்டுட்டீங்களா ... " கேக்குறதுக்கு தானே பேசினதே என மனதில் நினைத்துகொண்டே தொடர்ந்தேன் "எனக்கு அப்போவே லேசா ஒரு டவுட் இருந்தது"
"ஏன் இருக்காது... சுத்தி யாருக்கும் தமிழ் தெரியதுனா என்ன வேணும்னாலும் பேச வேண்டியதா" என்றாள்
"இப்போ நான என்ன தப்பா சொல்லிட்டேன்... சூப்பர் பிகருன்னு சொன்னது ஒரு தப்பா ..
சரிங்க சாரி தெரியாம சொல்லிட்டேன் நீங்க சூப்பர் பிகர் இல்லைங்க... நீங்க ஒரு மொக்கை பிகரு ... இப்போ ஒகேவா"
என நான் சொல்லவும் லிப்ட் நான்காவது மாடி வரவும் சரியாக இருந்தது
"you are so mean" என சொல்லி விட்டு கிளம்பினாள்
நான் அவள் பின்னாடியே சென்றேன் "வஞ்சிரம் மீன் பார்த்திருக்கேன் வாலை மீன் பார்த்திருக்கேன் அது என்னங்க so
mean " என்றேன்
என் தொல்லை தாங்க முடியாமல் திரும்பி "whats your problem?"
"நீங்க மொதல்ல தமிழுன்னு எனக்கு தெரியாது, அது போக நான் தப்பா எதுவும் சொல்லலையே அழகா இருக்கிற பொண்ண சூப்பர் பிகர்ன்னு சொன்னது தப்பா, உண்மையே சொல்லு you did not feel good when i said that, if you still
think otherwise i'm sorry ok"
"ஓகே fine என்ன அழகுன்னு சொன்னதால மன்னிச்சு விடுறேன்…i'm haritha"
"இப்போ எல்லாம் புரியுது நீங்க இந்த so
mean சொன்னதுக்கு காரணம் லிப்டுல உங்கள மொக்கை பிகருன்னு சொன்னதால தானே , அழகான பொண்ணுன்னு சொன்ன உடனே கூல் ஆயிடீங்க... between you can call me Shiva" இருவரும் கைகுளிக்கினோம்
"எந்த section " என்றாள்
" A section , நீங்க ?" அவளும் A Section என சொல்ல வேண்டும் என மனது எதிர்பார்க்க
" நான் Section B " என்று கூறி லேசான ஏமாற்றத்தை உண்டாக்கினாள், இருந்தாலும் இவளை சும்மா விடக்கூடாது என முடிவெடுத்தேன்
" B Section .. அது ஒரு மொக்கை கிளாஸு" என சொல்ல மறுபடியும் என்னை முறைத்துப்பார்க்க ஆரம்பித்தாள், நான் தொடர்ந்தேன்," வேணும்னே சொல்லல, நீங்க C Section பசங்கள பாருங்க full கலாட்டா... என கிளாஸ் இருக்கே full படிப்ஸ், இது ரெண்டுத்துக்கும் நடுவுல இருக்கிற ரெண்டுங்கெட்டான் கிளாஸ் தான் உங்க கிளாஸ், நீங்க இன்னைக்கு தான வந்து இருக்கீங்க, எதுக்கும் லாயக்கில்லாத ஓவர் சீன் பசங்க, இன்னைக்கி ஒரு நாள் பாருங்க உங்களுக்கே புரியும்" இதை நான் சொல்லி முடிக்கவும் பெல் அடிக்கவும் நேரம் சரியாக இருந்தது.
அவள் லேசாக சிரித்தாள் "ஒகே, கிளாஸ் ஆரம்பிக்கபோகுது, லஞ்ச் மீட் பண்ணுவோம்"
"sure " என பதிலளித்தேன்.
ரொம்ப நாள் கழித்து பெர்பெக்டா ஒரு பிளான்
execute பண்ணின திருப்தி கிடைத்தது, அதை விட அவள் கிளாஸ் பசங்க பற்றி நான் சொல்லிய விஷயம் எப்படி வொர்க் அவுட் ஆகும் என் யோசிக்க ஆரம்பித்தேன். நான் பாட்டுக்கு வாய்க்கு வந்தபடி மொக்க பசங்க மொக்கை கிளாஸ் அப்படின்னு கண்டபடி சொல்லிட்டேன். அவ கிளாஸ்ஸுல எதாவது intelligent fruit எதாவது இருக்கபோகுது என நினைத்தபோது ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. கார்த்திக்கும் B Section தான்!!!!!
இந்த மெஸ் உணவுக்காக நான் இவ்வளவு ஏங்கியதே கிடையாது, "லஞ்ச்ல மீட் பண்ணுவோம்" என்று அவள் சொன்னது, அன்று வகுப்பு முழுவதும், ஒவ்வொரு நிமிடமும் மதிய உணவிற்கான countdown . மதியம் மெஸ்ஸில் நான் அவளுக்காக காத்திருக்க, சில நிமிடங்களில் அவள் உள்ளே நுழைந்தாள், கூடவே எனக்கொரு ஆபத்தும் வந்துகொண்டிருந்தது. ஆம் அவள் கூட கார்த்திக்கும் வந்து கொண்டிருந்தான். அடடா நான் நிலத்துக்கு பட்டா போட்ட இவன் கட்டிடமே கட்டுவான் போல, லேசான தடுமாற்றதுடன் நான் உட்காந்திருக்க, தன் உணவை வேகமாக எடுத்தபடி என அருகில் வந்து "ஷிவா நீ சொன்னது 100 % கரெக்ட், அந்த கிளாஸ் பசங்க எல்லாருமே செம்ம மொக்கை"
எனக்கு என்ன சொல்லுவதென்றே புரியவில்லை, நான் பாட்டுக்கு குத்து மதிப்பா எதோ சொல்ல அவ அதை 100 % கரெக்ட்டுன்னு சொல்றா "நான் அப்போவே சொன்னேன், என்ன ஆச்சு யார் அந்த Mokkaboss ?"
"அதோ அவன் தான்" என கார்த்திக்கை பார்த்து சொல்ல எனக்கோ சிரிப்பு தாங்க முடியவில்லை
"யாரு கார்த்திக்கா ?"
"உனக்கு அவனை முன்னாடியே தெரியுமா? ப்ளீஸ் நான் இப்படி சொன்னேன்னு சொல்லிராத " என லேசாக கண்களை பூனை போல் மூடியபடி சொல்ல.
"எனக்கு அவனை ஒரு ரெண்டு நாளா தான் தெரியும், நம்ம batchல
இருக்கிற இன்னொரு தமிழ் பையன் அவன் ஒருத்தன் தான், பேச்சுதுணைக்கு வேற ஆள் ஏது, இந்தி வேற எனக்கு சுத்தம்மா வராது"
“அது பரவாயில்லையே, அவன் இந்தி பேசுறேன் பேர்வழின்னு பண்ற அட்டகாசம் இருக்கே" என பதில் அளித்தாள்
"ஏன் அவன் இந்தி நல்லா பேசுவான்னு சொன்னான்"
"அப்படிதான் நினைச்சிகிட்டு இருக்கான், நான் 5 வருஷம் டெல்லில இருந்திருக்கேன், படிச்சது எல்லாம் CBSE , இந்தி எனக்கு நல்லாவே வரும், ஆனா அவன் இந்தி பேசுறது இருக்கே, பாம்பேல இருந்து தமிழ் படத்துல்ல நடிக்கிற actress தமிழை கொலை பண்ணுவாங்க தெரியுமா. இவன் அதைவிட மோசமா இந்திய கொலை பண்ணுறான்.எதுக்கெடுத்தாலும் வயசான அங்கிள் மாதிரி எதாவது காரணம் சொல்லவேண்டியது." இவள் இப்படி சொல்ல நான் என்னை மறந்து பலமாக சிரிக்க ஆரம்பித்தேன்
"வில்லன் என நினைத்தவன் கௌண்டமணி போல் காமெடி பீஸ் ஆனான்"
"நீ பரவாயில்ல,,, இன்னைக்கி காலையில்ல இருந்து அவன் போட்ட மொக்கை தாங்க முடியில்ல, அவன் கோயம்புத்தூர் போல எதோ சிங்கப்பூர் மாதிரி பேசுறான்... ஆமா நீ எந்த ஊர் ?"
"நான் சிங்கப்பூர்லாம் கிடையாது... சிங்கார சென்னை"
"அப்பாடி நானும் சென்னை தான், சென்னைல எங்க"
கோவை சென்னையிடம் தோற்றது, ஹோசானவில் ஆரம்பித்த எங்கள் உரையாடல் , சென்னை, சத்யம் தியேட்டர், பெசன்ட் நகர் பீச் என பல விஷயங்களை சுற்றி திரிந்தது,
லஞ்ச் முடியும் பொது அவள்
"Freshers பார்ட்டி போறியா?" என்றாள்
"கண்டிப்பா!!!! நீயும் வருவல்ல, It will be fun" என நான் கேட்க
"வருவேன் ஆனா , but i don't drink, do you?"
"என்ன கேள்வி இது போறதே அதுக்கு தான" என்றேன்
"எல்லா பசங்களும் இதே மாதிரி……. அதுல என்ன தான் இருக்குனே புரியல"
"புரியேலனா இன்னிக்கி நீயும் வந்து try பண்ணு, பீர்ல இருந்து ஆரம்பி" என நான் கூற
"அந்த பொழப்பே வேணாம், சரி ஒரு கேள்வி கேக்குறேன் நீ இப்படி தண்ணி அடிக்கிற, ஒரு வேளை நீ நாளைக்கி கல்யாணம் பண்ற பொண்ணும் உன்னமாதிரியே தண்ணி அடிச்சா என்ன பண்ணுவ"
இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவே இல்லை, சற்று என்னை புரட்டி போட்டது என்றே சொல்ல வேண்டும், என் தயக்கத்தை அவள் சாமர்த்தியமாக பயன் படுத்த ஆரம்பித்தாள்
"பார்த்தியா !! யோசிக்கிற பசங்க மட்டும் என்னவேனாலும் பண்ணுவீங்க, Girls தண்ணி அடிக்கிறதுன்ன மட்டும் யோசி"
இவளுக்கு கவுன்ட்டர் கொடுத்தே தீரனும் என் முடிவுசெய்தேன் "Wait Wait நான் Girls தண்ணி அடிக்கக்கூடாதுன்னு எதாவது சொன்னனா? இவ்வளோ நாள் இதை பத்தி நான் யோசிக்கவே இல்லை, இப்பதான் புரியுது, நான் கல்யாணம் பண்ற பொண்ணும் தண்ணி அடிச்சா எவ்வளோ சூப்பரா இருக்கும், பாருக்கு ரெண்டு பெரும் ஒன்னா போகலாம், ஒரு வேளை நான் ஓவரா அடிச்சுட்டேன்ன அவ என்ன பத்திரமா வீட்டுக்கு கொண்டுவந்து சேத்துருவா, ஒரு வேளை அவளுக்கு ஜாஸ்தி ஆயிடுச்சுன்னா நான் பார்த்துப்பேன். அதை விடு பாருக்கே போக வேண்டாம் வீட்டுலே ஒரு மினி பார் ஓபன் பண்ணிடலாம் weekend ஆச்சுனா ஒரு ஸ்காட்ச் ஓபன் பண்ணி சிக்கன்னும் கையுமா செட்டில் ஆயிடலாம், இத விட ஒரு மனுஷனுக்கு வேற என்ன வேணும், seriously என் கண்ணை தொறந்துட்ட"
என பதில் கேட்டு சற்று கடுப்பானாள் "உங்களையெல்லாம் திருத்தவே முடியாது, எதாவது பாருக்கு போய் ….....get hooked up with someone " என கூறிவிட்டு கிளம்பினாள்
ஏனோ தெரியவில்லை அவள் சிரிப்பை விட அவள் கோபம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது, கோபத்தில் பல பெண்கள் அகோரமாக தெரிந்தாலும் அவள் கோபத்தில் ஒரு அப்பாவித்தனமும் அவள் சிரிப்பில் ஒரு அசட்டுத்தனமும் தெரிந்தது.
அதற்கு பிறகு பல நாட்கள் அந்த அசட்டுத்தனமும், அப்பாவித்தனமும் என தினசரி வாழ்வின் ஒரு பகுதியானது,
பல தடவை நான் குடித்தற்காக திட்டு வாங்கினாலும் இறுதியில் "Next டைம் கம்மியா குடிக்கணும்" என்பாள் சில தடவை அவள் கோபத்தை பார்பதற்காகவே போதையில் அவளுடன் பேசுவதுண்டு. கல்லூரியில் பலர் எங்களை காதலர்கள் என் நினைக்க நான் மட்டும் அந்த ஒரு நாளுக்காக காத்துக்கொண்டிருந்தேன்.
ஆனால் என்னையும் மீறி அன்று
seniors farewell பார்ட்டியில் என்ன நடந்தது என புரியாமல், அவளின் அந்த SMS பின்னால் இருந்த உண்மை தெரியாமல் தவிக்க ஆரம்பித்தேன்
---
மூன்றாம் உலகம் தொடரும்
மூன்றாம் உலகம் பகுதி 1
மூன்றாம் உலகம் பகுதி 3
மூன்றாம் உலகம் இறுதிப் பகுதி
மூன்றாம் உலகம் பகுதி 1
மூன்றாம் உலகம் பகுதி 3
மூன்றாம் உலகம் இறுதிப் பகுதி
0 comments:
Post a Comment