Links

Saturday, February 18, 2012

மூன்றாம் உலகம் - பகுதி 1


31 March 2011 11:40 AM
"சத்தியமா இனிமே தண்ணியே அடிக்கக்கூடாது" மங்காத்தா படத்துல அஜித் சொன்ன வசனத்துக்கு அர்த்தம் இன்று தான் புரிந்தது . லேசான தலைவலி, கண்ணை திறக்கவே கஷ்டமாக இருந்தது, அதையும் மீறி சற்று கண்ணை திறந்தேன். கண்ணை திறந்தவுடன் ஜன்னல் வழியாக சூரிய வெளிச்சம் பிரகாசமாக அடித்தது. கண்ணை மூடிக்கொண்டே தலையணைக்கடியில் கை விட்டு செல்போனை எடுத்தேன், unlock பட்டனை தவிர மத்த எல்லா பட்டனையும் அழுத்தினேன், சில நிமடங்களுக்கு பிறகு என் தொல்லை தாங்காமல்  செல்போன் தானாக விழித்துக்கொண்டது. நாள் 31 March 2011 நேரம் 11 : 45 AM  அதற்கு கிழே 4 new messagesதமிழ் சினிமாவில் வழக்கமாக மயக்கம் போட்டு விழுந்தவர்களும், பல வருடம் நினைவில்லாமல் கோமாவில் இருந்தவர்களும் கண்  முழித்தால் கேட்கும் கேள்வி அன்று என் மனதிலும் உதித்தது.

"நான் எங்க இருக்கேன்?" ... சட்டென்று படுக்கையில் இருந்து எழுந்தேன்... சுற்றி பார்த்தேன், "அப்பாடி என் காலேஜ் ஹாஸ்டல் ரூம் தான்" பயம் போன தைரியத்தில் மீண்டும் படுக்கையில் சாய்ந்தேன். விழிகள் தானாக மூடிக்கொண்டது.... சில நொடிகளில் என் மனதில் மீண்டும் ஒரு கேள்வி
"என் ரூம் தான் ஆனா ராத்திரி நான் எப்படி ரூமுக்கு வந்தேன்..... அடடா நேத்து பார்ட்டி ...கடைசியா அவகிட்ட தான பேசிகிட்டு இருந்தேன்"

முந்தைய நாள் இரவு நடந்த விஷயங்கள் எல்லாமே தேஞ்சு போன சீடி யில் பார்க்கிற படம் போல விட்டு விட்டு ஞாபகத்துக்கு வந்தது. படுக்கையை விட்டு எழுந்தேன் வாஷ் பேசினில் முகத்தை கழுவிக்கொண்டே யோசித்தேன். சில விஷயங்கள் ஞாபகத்துக்கு வர ஆரம்பித்தது


ஆம் நேற்று என் காலேஜ் seniors farewell  பார்ட்டி... வழக்கமாக 5 large மேல அடிக்காத நான் அன்று ஏழு எட்டு என மானாவாரியாக அடித்தது தான் இந்த போதைக்கு காரணம். மனம் சற்று தெளிவானது. முகத்தை துடைத்துக்கொண்டே கண்ணாடியில் பார்த்தேன், நான் எவ்வளவு தண்ணி அடித்திருக்கிறேன் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை என முகமே சொல்லும். சரி குளிக்கலாம் என முடிவெடுத்தேன் பாத்ரூமில் சுடு தண்ணி வருகிறதா என பார்த்தேன்...வரவில்லை, குளிக்கும் எண்ணத்தை கைவிட்டேன்.

சரி இந்த டிரஸ்யாவது மாத்துவோம் என யோசித்தபோது  என் ஜீன்ஸ் பாக்கெட்டில் ஏதோ விஷயம் என்னை உறுத்த அதை வெளியே எடுத்தேன் ... கசங்கிய நிலையில் ஓர் சிகப்பு ரோஜா. என் நினைவலைகள் மீண்டும் நேற்று  நடந்த பார்ட்டிக்கு சென்றது. ஆறாவது லார்ஜுக்கு அப்புறம் ஹோட்டல் ரிஷப்ஷனில் வைத்திருந்த அந்த ரோஜாவை எடுத்தது ஞாபகத்துக்கு வந்தது. அதைவிட என்னை தூக்கி வாரி போட்ட விஷயம் அதை ஏன் எடுத்தேன் என்ற காரணமும் ஞாபகத்துக்கு வந்தது.

"போதையில் நாம் சந்திக்கக்கூடாத இரு நபர்கள்

ஒருவர் நம் பயணிக்கும் பாதையில் குறுக்கே வந்து நம் பணத்தை திருடும் டிராபிக் போலீஸ்
இன்னொருவர் நம் வாழ்கை பயணத்தில் குறுக்கே வந்து நம் மனதை திருடும் ஒரு பெண்"

நான் சந்தித்தது இரண்டாவது ரகம். நான் அந்த ரோஜாவை எதற்கு எடுத்தேன் என்பது இப்போது எல்லாருக்கும் புரிந்திருக்கும். மீண்டும் அந்த பார்ட்டியில் நடந்த விஷயங்களை ஒவ்வொன்றாக ஞாபகம் வர ஆரம்பித்தது ஆறாவது லார்ஜுக்கு பின்பு "என்ன ஆனாலும் சரி இன்னைக்கி அவ கிட்ட சொல்லியேத்தீரணும்" என்ன செய்வது என்று புரியாமல் அந்த ஹோட்டல் ரிசப்ஷன் அருகில் வந்த போது அந்த சிகப்பு ரோஜா என் கண்ணை கவர்ந்தது"

வெறி வந்த காளை மாட்டுக்கு சிகப்பு வண்ணம் எவ்வளவு மோசமானதோ அது போல் தான் அந்த சிகப்பு ரோஜா என் எண்ணங்களை தூண்டிவிட்டது. நேராக சென்று ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் "Can i take this?" என கேட்க அவளோ எங்கே அவளுக்கே திருப்பி கொடுத்துவிடுவேனோ என்ற தயக்கத்துடன் என்னை பார்த்தாள். போதையில் மனிதனுக்கு பல சக்திகள் வரும் அதில் ஒன்று மற்றவர் மனதில் ஓடும் விஷயங்கள் நம் கண்களில் High Definition video format இல் தெரியும்.

"கவலை படாதிங்க... Its not for you" , என நான் சொல்ல ... அந்த பெண் லேசான புன்னகையுடன் அந்த ரோஜாவை கொடுத்தாள். இதே புன்னகை நான் ரோஜாவை கொடுக்கும் போது அவளிடம் இருந்து வந்தால் போதும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் பார்ட்டி ஹாலுக்கு சென்றேன்.
பார்ட்டி ஹாலில் அவளை தேடினேன் கிடைக்கவில்லை. நேராக என்னை நோக்கி கார்த்திக் வந்தான் (இவனோட introduction பத்தி அப்புறம் பார்ப்போம்)

"மாப்பிள என்னடா கிளாசும் கையுமா இருப்பேனு பார்த்தா ரோசும் கையுமா இருக்கே".

அவளை தேடும் போது தான் இந்த மாதிரி ரைய்மிங்கா பேசுவாங்க என்ற கடுப்புடன் நிற்க. கார்த்திக் நிற்கவில்லை. "மாமா ஆல் விஸ்கி டுடே ஸ்பொன்சர்... இந்தா சரக்கு உள்ள இறக்கு"
ஆகா இவன் இன்னைக்கு நிறுத்தமாட்டான் இவன கழட்டிவிடனுணா வேற வழியே இல்லை என முடிவெடுத்தேன் அவன் கையிலிருந்த இன்னொரு லார்ஜ் விஸ்கியை வாங்கினேன்.

அப்போது கார்த்திக் , "மச்சி பார்த்து அடி அது கொஞ்சம் ஸ்ட்ராங்"

"ஸ்ட்ராங்கா ... என்ன ஸ்ட்ராங்... ஏற்கனவே ஏகப்பட்ட ரவுண்டு போயாச்சு" என கூற அவனோ "நீ அடிடா அப்புறும் தெரியும்" என் சொல்லிவிட்டு கிளம்பினான்.
அப்புறும் தெரியும் அவன் சொன்ன போதே லேசா ஒரு டவுட் வந்தது. விஸ்கியை லேசாக முகர்ந்து பார்த்தேன், வாசம் கும்மென்று இருந்தது.

சுற்றி முற்றும் அவள் இருக்கிறாளா என பார்த்தேன்.... இல்லை... லேசாக ஒரு சிப் உள்ளே இறங்கியது ... ஆகா தாறுமாறான மிக்சிங் ... ரொம்ப நாள் கழித்து இப்படி ஒரு சூப்பர் மிக்சிங். இன்னும் இரு சிப் வேகமாக உள்ளே இறங்கியது... ஏற்கனவே என் வழக்கமான அளவிற்கு மேல் சென்று கொண்டிருந்த நான் அதற்கு பிறகு வேறு நிலைமைக்கு செல்ல ஆரம்பித்தேன்.

தீவிரமாக டிவியில் ஒரு கிரிக்கெட் மாட்சை பார்க்கும் பொது சேனல் கட் ஆகி புள்ளி புள்ளியாக ப்ளாக் அண்ட் white  ஸ்க்ரீன் வந்தால் எப்படி இருக்கும். அது போல் தான் இப்போது எனக்கு, அதற்கு பிறகு என்ன நடந்தது என்பது எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. மீண்டும் ஞாபகம் செய்ய முயற்சித்தேன் பயனில்லை. மீண்டும் பல தடவை முகத்தை கழுவி பார்த்தேன்... ஒரு பாட்டில் தண்ணீர் (குடி தண்ணீர் :) ) குடித்தேன் பயனில்லை. பரிட்சையில் ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றாலும் கூட நான் இவ்வளவு யோசித்ததில்லை. நேராக வந்து படுக்கையில் அமர்தேன்.

"அப்புறம் தெரியும்னு அந்த பக்கி சொன்ன போதே டவுட் ஆனேன் ... அப்புறமா ஒண்ணுமே தெரிய மாட்டேங்குதே" என்ற கடுப்புடன் ரூமை விட்டு வெளியே வந்தேன்

அப்போது என்னோடு படிக்கும் வடஇந்திய நண்பன் ஒருவன் வந்தான் "Dude !!! look at you... full hangover... what were you both doing sitting in one corner and chatting for a long time, actually she only dropped u in her car. me and karthik got u back in your room"

மீண்டும் என் ஞாபத்திற்கு பவர் கனக்க்ஷன் கொடுத்தான். நான் லேசாக சிரித்துக்கொண்டே என் ரூமிற்குள் வந்து படுக்கையில் அமர்ந்தேன்....... ஞாபகங்கள்....... ஆனால் இப்போது விட்டு விட்டு வருகிறது

பார்ட்டியில் நான் உட்காந்திருக்க தூரத்தில் அவளும் அந்த ஹாலில் நுழைகிறாள். நான் அவளை நோக்கி "ஹேய்... ஹரிதா" என கூப்பிட அவள் என்னை பார்த்து சிரித்தாள். விஸ்கியின் போதையை விட அவள் சிரிப்பில் இருந்த போதை என்னை எங்கோ கொண்டு சென்றது. என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள் என முன்னால் பார்ட்டியில் தறிகெட்டு ஆடிகொண்டிருந்தவர்களை விலக்கிக்கொண்டு என்னை நோக்கி வர முற்பட்டாள். நான் கையை காலை வைத்திக்கொண்டு சும்மா இருந்திருக்க வேண்டும். என கையிலிருந்த கிளாசை எடுத்தேன் அவளை நோக்கினேன்.
கிளாசை நீட்டி "Cheers !!!" என்றேன். அதுவரை அவளிடம் இருந்த சிரிப்பு லேசாக மறைய ஆரம்பித்தது. என அருகில் வந்து அமர்ந்தாள்.

நான் என்ன சொல்லுவது என தெரியாமல் "Sorry" என்றேன்
"பார்ட்டினா இப்படி தான் கண்ணு முன்னு தெரியாம குடிக்கவேண்டியதா... இதுல cheers வேற ... sorry கேக்கணும்னு தோணிச்சே அதுவரை சந்தோசம்" என்றாள்
"நான் அதுக்கு sorry கேக்கலையே "
"அப்போ எதுக்கு ?"
"இல்ல உன் கைளையும் கிளாஸ் இருக்கும்னு நினைச்சு cheers சொல்லிட்டேன். கிட்ட வந்ததுக்கு அப்புறமா தான் தெரிஞ்சுது உன் கைல எதுவுமே இல்லன்னு... அதுக்குதான் சாரி சொன்னேன் " என சிரித்துக்கொண்டே என கிளாசின் இறுதி சிப்பை அருந்தினேன். அவ செம்மம கடுபாயிட்டா.

அந்த கடைசி பெக் என ஞாபகத்தின் இறுதி அத்தியாயம். அதற்க்கு மேல் ஒன்றும் ஞாபகதிற்கு வரவில்லை. நடக்கமுடியாமல் அவள் தோளில் கை போட்டு நடப்பது போலவும், எங்கோ காரில் செல்வது போலவும், காரை அவள் ஓட்டுவது போலவும். கையில் ரோஜா பூவுடன் அவளிடம் எதோ பேசுவது போலவும்  மனதில் பிம்பங்கள் வந்து வந்து சென்றது. அந்த லேசான தலைவலி சற்று அதிகமாக ஆரம்பித்தது.

இதற்கு மேல் பயனில்லை என்ற முடிவிற்கு வந்தேன். Opening லேயே cheers சொல்லி அப்படி கடுப்பேத்திருக்கிறேனே இன்னும் என்ன பேசியிருப்பேனோ என யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது தான் 4 new messages ஞாபகத்திற்கு வந்தது. செல் போனை தேடினேன் என போர்வையில் எங்கோ மறைத்திருந்து. வேகமாக எடுத்து ஒவ்வொரு மெசேஜாக படிக்க அரம்பிதேன்.முதல் மெசேஜ் airtel customer care. இரண்டாவது ICICI Bank மூன்றாவது மீண்டும் airtel எத்தனைவாட்டிடா அனுப்புவிங்க என்ற கடுப்புடன் இறுதி மெசேஜ் ஆம் ஹரிதாவின் மெசேஜ்
" I donno wht happnd 2 u tonite but i never expected ths frm u"

"சத்தியமா இனிமே தண்ணியே அடிக்கக்கூடாது டா" இந்த டயலாக்கில் உள்ள உலக உண்மை இப்போதுதான் புரிய ஆரம்பித்தது


                                              - உலகம் மிகப் பெரியது


மூன்றாம் உலகம் பகுதி 2
மூன்றாம் உலகம் பகுதி 3
மூன்றாம் உலகம் இறுதிப் பகுதி


                                                    

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More