பயணம் பகுதி 1
பயணம் பகுதி 2
பகுதி 3 இப்பொழுது
காலையில் அம்மா என்னை எழுப்பும் குரல், பின்னால் இன்னொரு சத்தமும் கேட்கிறது சன் டிவியில் "இந்த நாள் இனிய நாள்", இனிய நாள்!!! ஆம் இன்று ஹரிதாவின் திருமணம், கடந்த ஒரு வாரம் என்னால் ஒரு விஷயத்தில் கூட கவனம் செலுத்த முடியவில்லை, பணிக்கு இன்னொரு வாரம் விடுமுறை அறிவித்தேன், வீட்டில் எல்லோரும் எனக்கு எதோ உடம்பு சரியில்லை என நினைக்க, நானோ எதுவும் செய்ய முடியாமல் ஒரு மூலையில் உட்காந்திருந்தேன். இன்று எனக்கு இன்னொரு குழப்பம் அந்த திருமணத்திற்கு செல்ல வேண்டுமா ? என் இதயத்தை கிழித்தெடுக்கும் நிகழ்வை காண வேண்டுமா? என் வாழ்வில் ஹரிதாவை மொத்தமாய் இழக்கும் காட்சியை பார்க்க வேண்டுமா ?
ஆனால் திருமணத்திற்கு கிளம்ப தயாரானேன், காரணம் ஒன்றே ஒன்று தான் மீண்டும் அவளை பார்க்கும் ஒரு வாய்ப்பு. கல்யாணம் ஆரம்பிக்க இன்னும் இரண்டு மணிநேரம் தான் இருக்கிறது, பல் தேய்க்க சென்ற போது பேஸ்ட் தீர்ந்துவிட்டது, பின்பு அருகில் இருக்கும் கடையில் சென்று வாங்கி வருவதற்குள் இன்னும் தாமதமாகிவிட்டது, விட்டை விட்டு வெளிய வரும்போது என் செல் போனை பார்த்தால் அதில் சுத்தமாக சார்ஜ் இல்லை. ஆனது ஆகட்டும் என வீட்டை விட்டு கிளம்பினேன். அந்த கல்யாண மண்டபம் நெல்சன் மாணிக்கம் ரோட்டில் உள்ளது, நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் சென்று ஆட்டோ பிடித்து செல்ல வேண்டும்.
வழக்கமாக என் வீட்டில் இருந்து நுங்கம்பாக்கம் வர குறைந்த பட்சம் ஒரு மணிநேரம் ஆகும் ஆனால் இன்றோ 45 நிமிடத்தில் நுங்கம்பாக்கம் ரயிலடி வந்து சேர்ந்தேன். வீட்டை விட்டு வெளிய வந்தவுடன் ஒரு ஆட்டோ, மவுண்ட் ஸ்டேஷன் வந்த ஒரே நிமிடத்தில் ஒரு ட்ரைன், என எல்லா விஷயங்களும் வேகமாக நடந்தது. எந்த ஒரு விஷயத்தை செய்ய ரொம்ப தயங்குகிரோமோ அந்த விஷயத்திற்கு சாதகமாக அணைத்து சம்பவங்களும் நடக்கும் என்பது அன்றைக்கு நிருபனமானது.
நுங்கம்பாக்கத்தில் ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறி கடைசி சீட்டில் அமர்ந்தேன், கல்யாண மண்டபத்தின் பெயரை ஆட்டோக்காரனிடம் சொல்ல " ஏறு!!! பத்து ருபாய், சில்லறையா வச்சுக்குங்க"
ஆட்டோவில் ஆரம்பித்த இந்த பயணம் முடிய இறுதியாக அதே ஆட்டோவில் சென்று கொண்டிருப்பதை நினைத்தேன், ஆட்டோ கல்யாண மண்டபத்தை நெருங்கியது.
எட்டி அந்த கல்யாண மண்டபத்தை பார்த்தேன்
"Haritha Weds Ram" இதயம் ஒரு விநாடி நின்றது, என்னால் அந்த மண்டபத்தை பார்க்க முடியவில்லை, அதே நேரம் ஆட்டோ மண்டபத்தை சென்றடைந்தது.
"சார் நீங்க சொன்ன மண்டபம் இது தான்" என்றான் ஆடோக்காரன்
எனக்கு வெளியே இறங்க தைரியம் இல்லை , அவள் பெயர் அருகில் இன்னொருவனின் பெயரைக்கூட பார்க்க முடியாத நான் எப்படி கல்யாண மண்டபத்தில் இன்னொருவன் அருகில்...... கல்யாணத்திற்கு செல்லும் யோசனையை கைவிட்டேன்.
"இது இல்லை நீங்க போங்க நான் சொல்றேன்" என சொல்ல ஆட்டோ கல்யாண மண்டபத்தை விட்டு விலகியது
ஆட்டோ மண்டபத்தை விட்டு நகர என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் நிரம்ப ஆரம்பித்தது, இதை ஆட்டோவில் யாரும் பார்த்துவிடக்கூடாது என நினைந்து தலை குனிந்தேன், கண்களை மூடிக்கொண்டேன், என்னை அறியாமல் கணவுலகம் சென்றேன், நான் முதன் முதலில் அவளை ஆட்டோவில் பார்த்ததில் இருந்து அன்று பூங்காவில் கொடுத்த முதல் முத்தம் வரை அனைத்தும் வந்து சென்றன, உறக்கம் என்னை அறியாமல் ஆட்கொண்டது.
"சார், என்ன காலையிலேயே தூக்கமா" ஆடோக்கரனின் குரல், மீண்டும் நிஜவுலகம் வந்தடைந்தேன்.
"அந்த மண்டபத்துல இறங்கனுன்னு சொன்னிங்க அப்புறமா இந்த இடம் இல்லன்னு சொல்லிட்டு இப்படி தூங்கிட்டு இருக்கீங்க... பார்த்த படிச்சவுறு மாதிரி தெரியுது நீங்க எங்க தான் போனும்,"
"எப்படி தூங்கினேனே தெரியல இது எந்த இடம்"
"நல்லா கேட்டீங்க ... மொதலா கிழ இறங்குங்க.. ஆட்டோ இதுக்கு மேல போகாது இது அண்ணா ஆர்ச்"
"அவ்வொலோ தூரம் வந்துட்டேன்னா, நீங்க திருப்பி நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் வழிய தானா போவிங்க, நான் அப்பிடியே ஸ்டேஷன்ல இறங்கிக்கிறேன்"
"ஸ்டேஷன் வழியா தான் போவேன் ஆனா ஆட்டோ முழுசா சவாரி வந்ததுக்கப்போரம் தான் எடுப்பேன், கொஞ்சம் டைம் ஆவும் வேற எதாவது ஆட்டோ புடிச்சு போ "
"பரவாயில்லை நான் இங்கயே இருக்கேன் "
"சரி என்னோமோ பண்ணுங்க காசு கொடுத்தா சரி"
அந்த ஆட்டோ மீண்டும் சில மக்களுடன் நுங்கம்பாக்கம் நோக்கி புறப்பட்டது, இந்த முறை தூங்கிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன், ஆட்டோ மீண்டும் நெல்சன் மாணிக்கம் ரோட்டில் நுழைந்தது, வழியில் ஆங்காங்கே நிறுத்தி மக்களை ஏற்றியும் இறக்கியும் விட்டவாறு சென்று கொண்டிருந்தது. இந்த ஆடோவுக்கும் நம் வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை ஒரு இடத்தில் ஏறி இன்னொரு இடத்தில இறங்குவது போல தான் நாம் வாழ்கையின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு சிலர் வந்து செல்கிறார்கள்.
இந்த யோசனையில் இருக்கும் போது மீண்டும் கல்யாண மண்டபம் நோக்கி ஆட்டோ சென்றுகொண்டிருந்தது, மறுபடியும் அந்த பெயர் பலகையை பார்க்க எனக்கு தைரியம் இல்லை, தலையை குனிந்துகொண்டேன் கண்களை மூடிக்கொண்டேன் மீண்டும் தூங்கிவிடக்கூடாது என்ற எண்ணத்துடன். அதே போல் ஆங்காங்கு நிறுத்தி ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்றது அந்த ஆட்டோ . சிறுது நேரத்தில் ஆட்டோ முழுவது நிரம்பி இருந்தது, ஏதாவது ஒரு சத்தமான இடத்தில கண்களை மூடிக்கொண்டால் நம்மை சுற்றி இருக்கும் உலகத்தில் உள்ள எல்லா சத்தங்களும் தெள்ளத்தெளிவாக கேட்கும்.... நான் கேட்ட சில சத்தங்கள்
"ரொம்ப காதலை இந்த பூமி கண்டிருக்கும் பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும் ... இந்த உலகத்தில் எவனுமே இராமன் இல்லை " எப்ம் ரேடியோவில் லேசாக கேட்ட பாடல்
" டேய் பொறம்போக்கு ஓரமா போடா " ஆடோக்கரனின் வசைமொழி
"தெனமும் இந்த டிராபிக்... " அலுவலகத்திற்கு வேகமாக செல்ல வேண்டிய ஒருவரின் ஏமாற்றம்
"இருவிழி உனது இமைகளும் உனது ", எனக்கு மிகவும் பிடித்த பாடல், ஆட்டோவில் யாரோ ஒருவரின் ரிங் டோன்
"சார் இந்த பாஸ்போர்ட் ஆபீசிக்கு எங்க இறங்கனும் ", " இந்த ஆட்டோ அந்த வழிய தாம்பா போகும் ஆபீஸ் முன்னாடியே இறங்கிக்கலாம்" இந்தியாவிலருந்து ஏற்றுமதி ஆக ஒருவன் வழி கேட்டுகொண்டிருந்தான்
இவ்வாறாக பல சத்தங்கள்..... இந்த எப்ம் ரேடியோ சத்தத்தால் மற்ற சத்தங்கள் சரியாக கேட்கவில்லை, சிறுது நேரத்தில் ரேடியோவில் பாடல் முடிந்தது, இப்போது ஆட்டோவில் இருக்கும் பேச்சு சத்தம் சற்று தெளிவாக கேட்கிறது,
"நான் அவர் கிட்டே பேசிட்டேன் அவர் என் Decision ரொம்ப சரின்னு சொன்னாரு, நான் ரொம்ப யோசிச்சிதான் இந்த முடிவ எடுத்தேன்" செல்போனில் யாரோ பேசும் குரல், என்னை தூக்கிவாரிபோட்டது அந்த குரல், யாரோ பேசும் குரல் அல்ல அது ஹரிதாவின் குரல். நான் தலை குனிந்து இந்த உலகத்திலுள்ள சத்தங்களை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் போது அவள் இதே ஆட்டோவில் முதல் சீட்டில் அமர்ந்திருந்தாள், திருமண கோலத்தில் அவள் இல்லை, என்ன நடந்தது?...... உலகத்தில் உள்ள எல்லா சத்தங்களும் அடங்கியது, என் இதயத்துடிப்பும் அவள் குரல் மட்டுமே என் காதில் விழுந்தது, அவள் செல் போன் பேச்சை தொடர்ந்தாள்
"அம்மா நீ சொல்றது கரெக்ட் இத நான் அப்போவே சொல்லி இருக்கலாம், ஆனா அப்போ நான் அவனை பார்கலையே, ராம் நல்லவரு தான் ஆனா சதீஷ் is made for me and he is mad on me"
நான் திரும்பி மேல பார்த்தேன் ஆண்டவனை தேடி ஆனால் ஆட்டோவின் கூரை தான் தெரிந்தது, மீண்டும் அவள் பேச்சை தொடர்ந்தாள்.
"கல்யாணம் நின்னு போச்சுன்னு எல்லாரும் கோபமா இருபாங்க நீதான் சமாதானப்படுதனும்", " நான் இப்போ ஆட்டோல போய்கிட்டு இருக்கேன்... சதிஷ பார்கத்தான், ரொம்ப நேரமா அவன் போன் சுவிட்ச் ஆப் ஆகியிருக்கு. அன்னைக்கே ரொம்ப சோகமா கிளம்பி போனான் அதுக்கப்புறம் பேசவே இல்லை "
அப்போது தான் என் செல் போனை பார்த்தேன் பாட்டரி சார்ஜ் இல்லாமல் Switch ஆப் ஆகியிருந்தது. இறுதியாக ஆட்டோ நுங்கம்பாக்கம ரயிலடி வந்து சேர நான் இறங்க தயாரானேன். எனக்கு முன்னால் அவள் இறங்கினாள், அவள் ஆடோக்கரனிடம் நூறு ருபாய் கொடுக்க, அவன் அவளிடம் சில்லறை கேட்டு சண்டை பிடிக்க... நான் பின்னால் நின்று ரசித்துக்கொண்டிருந்தேன், அன்றில்லிருந்து இன்று வரை இவளுக்கு இதே சில்லறை பிரச்சனை.
ஆடோக்காரன் என்னை பார்த்து "சார் சில்லறை இருக்கா, காலையில இது தான் இரண்டாவது சவாரி எல்லாரும் நூறு ருபாய் கொடுத்தா நான் எங்க போறது "
அவள் திரும்பி என்னை பார்த்தாள் ஒரு நிமிடம் அவளுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை, அவளுக்கும் சேர்த்து நான் ஆடோக்கரனுக்கு கொடுக்க அவன் எங்கள் இருவரையும் ஒரு மாதிரியாக பார்த்தபடி ஆட்டோவை கிளப்பினான்
"இவ்வோளோ நேரம் இதே ஆட்டோல தான் இருந்தியா?" நான் சிரித்தபடி தலை அசைத்தேன்
"அப்போ போன்ல பேசின எல்லாத்தையும் கேட்டுட்ட ", மீண்டும் நான் சிரித்தேன்
"இங்க என்ன பண்ற " என்றாள் சற்று கோபத்துடன்
"நான் கேட்க வேண்டிய கேள்வி உனக்கு தான் கல்யாணம், யாரோ சொன்னியே Mr.Niceguy,Open Minded ... இங்க என்ன பண்றே "
"நீ மொதல்ல சொல்லு "
"நீ தான் அன்னைக்கி பார்க்குல, 'என் கல்யாணத்துக்கு வருவல்ல ?' அப்பிடின்னு கேட்ட, அதனால தான் வந்தேன். இப்போ சொல்லு ... என்னை மாதிரி கவிதையெல்லாம் எழுதுவாருன்னு சொன்ன "
"அன்னைக்கி பார்க்குல நான் மட்டும் தான் பேசினேனா? போறதுக்கு முன்னாடி நீ என்ன சொன்ன "
"பார்க்குல ஏதேதோ சொன்னேன், இப்போ எதுவும் ஞாபகம் இல்லை "
"எப்படி இருக்கும் ... கல்யாணத்துக்கு வருவியான்னு கேட்டா ' பேசாம செத்துறலாமுன்னு ' சொல்லிட்டு நீ பாட்டுக்கு கிளம்பிட்ட , இந்த ஒரு வாரம் நான் தூங்கவே இல்லை, அம்மா, அப்பா, சொந்தகாரங்க, அவுங்க அம்மா அப்பா, எல்லாரயும் convince பண்ணி கல்யாணத்தை நிறுத்த நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும், நீ பாட்டுக்கு ஜாலியா வந்து இங்க என்ன பண்றேன்னு கேக்குற"
"இப்படி அவசர பட்டு கல்யாணத்தை நிறுத்திடியே!! நாளை பின்ன உன்னை யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க" என்றேன் ஒரு அசட்டுச்சிரிப்புடன்
"என்ன சொன்ன யாரு கல்யாணம் ....." என்னை அடிக்க வெறித்தனத்துடன் துரத்த ஆரம்பித்தாள்... நானும் ஓட ஆரம்பித்தேன்
பயணங்கள் என்றும் முடிவதில்லை
பின்குறிப்பு : இக்கதையில் வரும் பல சம்பவங்கள் கற்பனையே.. என் வாழ்விலும் என் நண்பர்கள் வாழ்விலும் நடந்த சில உண்மை சம்பவங்களும் இதில் அடக்கம். மேலும் இக்கதை முழுவதும் கூகுள் Transliteration மூலம் டைப் செய்யப்பட்டது, அதற்கு மேலாக இது என் முதல் சிறுகதை..... எழுத்துப்பிழை பல இருக்க வாய்ப்புள்ளதால் என்னை ரொம்ப திட்டிவிடாதிர்கள். மற்ற பகுதிகளுக்கான இணைப்புகள்.