Links

Friday, May 20, 2011

பயணம் - பகுதி 2



பகுதி 2:  ஆறு வருடங்கள் கழித்து 
காலை 9 மணி 


இன்று இந்தியாவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் எல்லோருக்கும்  இருக்கும் ஒரு கனவு, சொல்ல போனால் பலருக்கு இன்னும் கனவாகவே இருக்கும் ஒரு காரியத்தை இப்போது தான் முடித்தேன். ஆம் பதினெட்டு மாதம் கடல் கடந்து எதோ ஒரு அமெரிக்க நிறுவனத்துக்கு தினக்கூலி செய்து முடித்துவிட்டு இந்தியா திரும்பினேன். கொஞ்சம் ஸ்டைலாக சொல்ல வேண்டுமானால் onsite இல் இருந்து திரும்பி வந்து ஒரு வாரம் ஆகிறது. 

கடல் கடந்து செல்லும் போது ஏதோ ஒரு பெரிய விஷயம் நமக்காக காத்திருப்பது போல இருக்கும், அனால் அங்கு சென்ற பின்பு தான் தினம் தினம் கட்டிட வேலை செய்யும் கொத்தனாருக்கும் நமக்கும் ரொம்ப பெரிய வித்தியாசம் இல்லை என்பது புரியும். என்ன அவன் நம்ம ஊருல வெட்ட வெயில கொறஞ்ச சம்பளத்துக்கு வேலை பார்பான் ஆனா நானோ அமெரிக்காவில் அதி நவீன அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். நம்ம ஊரில் ஒரு கொத்தனாருக்கு என்ன மரியாதையோ அதே மரியாதை தான் இந்தியாவில் இருந்து வந்த எனக்கு. ஆனாலும் சம்பளம் டாலர்சில் வருகிறதே,..... இந்த டாலர் மட்டும் இல்லை என்றால் இந்நாட்டை பற்றி நமக்கு தெரித்திருக்க வாய்ப்பே இல்லை. என்னை பொறுத்த வரை நான் அமெரிக்கா சென்றதற்கு கிடைத்த ஒரே பலன் அங்கு போய் ஊர் சுற்றி பார்த்ததுதான். Times Square, Las Vegas, Grand Canyon, Statue of Liberty இங்கெல்லாம் சென்று புகைப்படம் எடுத்து Facebook இல் போட்டு இந்தியாவில் இருக்கும் பலருக்கு வயிற்றெரிச்சல் உண்டாக்கியது தான்  நான் செஞ்ச ஒரே நல்ல காரியம். 


கடந்த ஒரு வாரமாக காலையில் எழுந்திரிப்பது கொஞ்சம் சுலபமாக இருந்தது, வழக்கமா கஷ்டமா இருக்கும் என்பார்கள். முன்பெல்லாம் தினமும் அம்மா எழுப்பிவிடும் சத்தத்துடன் என் நாள் தொடங்கும். ஆனால் இப்போது அம்மா "பையன் அமெரிக்காவில் இருந்து இப்போ தானே வந்தான் நம்ம ஊரு நேரத்துக்கு வர கொஞ்ச கஷ்டமா இருக்கும்"  என நினைத்து என்னை எழுப்புவதே இல்லை.ஆனால் அமெரிக்க சென்றாலும் செல்லாவிட்டாலும் நான் காலையில் சீக்கிரமாக எழுந்ததாக சரித்திரமே கிடையாது. 


இன்று எழுந்தவுடன் ஒரு இனம் புரியாத கடுப்பு ... ஆம் மீண்டும் அலுவலகம் செல்ல வேண்டும், அமெரிக்காவில் செய்த தின கூலி பற்றிய ஒரு ரிப்போர்ட் ஒரு மீட்டிங் என பல தேவை இல்லாத விஷயங்கள் செய்ய வேண்டும். அது மட்டும் இல்லை அமெரிக்காவில் இருந்து கிலோ கணக்கில் கொண்டுவந்த இனிப்பையும் கொடுக்க வேண்டும். நான் அமெரிக்க சென்ற இந்த சில மாதங்களில் நான் முக்கியமாக இழந்த ஒரு விஷயம் எனது பைக். பல நாட்கள் கேட்பாரற்று கிடந்தது இறுதியில் என் தம்பி அதை பெங்களூர் கொண்டு போய் விட்டான். 


ஒரு வழியாக பத்தரை மணிக்கு பஸ் ஸ்டாண்ட் வந்து நின்றேன். அமெரிக்காவில் இருந்த வந்த எனக்கு சென்னை வெயில் சற்று கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் இருபது வருடம் இந்த ஊரில் நான் வாழ்ந்த வாழ்க்கை ஒரு பதினெட்டு மாத வனவாசத்தில் மாறி விடாது என்ற நம்பிக்கை இருந்தது. கொஞ்ச நாளில் எல்லாம் பழய நிலைமைக்கு வந்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்த போது ஒரு ஆட்டோ என் அருகில் வந்து நின்றது.

"எங்க சார் ஸ்டேஷன் போறிங்களா" என்றான்
"மவுண்ட் ஸ்டேஷன் எவ்வளோ " என்றேன்
"வழக்கம் போல தான் சார் இருபது ருபாய்"  என்றான்
நானும் ஏற்கனவே தாமதம் ஆனதாலும் கையில் ஒரு கிலோ சாக்லேட் இருப்பதாலும் ஆட்டோவில் ஏறினேன். நான் ஏற என் கூட இன்னொருவரும் ஏறி பின் சீட்டில் அமர ஆட்டோ கிளம்பியது. கையில் இருக்கும் சாக்லேட் பையை என் கால் அருகில் வைத்துக்கொண்டிருக்கும் போது ஒரு perfume என் மூக்கை தொளைத்தது. இது எனக்கு மிகவும் பழக்கப்பட்ட வாசம், என்னை கவர்ந்த வாசம், ஆம் ஹரிதாவின் perfume சற்று திரும்பினேன் வாசம் மட்டும்மல்ல வாசத்தின் சொந்தகாரியும் அமர்ந்திருந்தாள்.

எவ்வளவு நேரம் இளையராஜா பாடல் போல் சீராக அடித்துகொண்டிருந்த என் இதயம் யுவன் ஷங்கர் ராஜா பாடல் போல் வேகமாக அடிக்க ஆரம்பித்தது. 

ஆம் மீண்டும் ஒரு பயணம், ஹரிதாவுடன். அவள் என்னை கவனிக்கவில்லை காதில் earphone கையில் i-pod . இன்றும் அதே போல் பாலிஷ் செய்த நகங்கள், புதிய தங்க மோதிரம் 
"தங்கம் அழகா !!! இல்லை அதை அணிந்த இந்த விரல் அழகா !!!" சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்தினாலும்,நாட்டமை  சரத்குமாரை கூப்பிட்டு தீர்ப்பு சொல்ல சொன்னாலும், கண்டு பிடிக்க  முடியாத காரியம். 
நான் இந்த ஆராய்ச்சியில் நான் முழு வீச்சில் இருக்கும் போது அவள் வெளியில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள், அந்த நேரம் பார்த்து ஆட்டோ ஒரு பள்ளத்தில் இறங்க, அவள் என் மேல் லேசாக இடிக்க, அரசாங்கம் என் இத்தனை வருசமாக ரோடு போடாமல் இருந்த காரணம் இன்று தான் எனக்கு புரிந்தது. 

என்னை பார்த்து திரும்பி சாரி என்று சொல்ல முற்பட்ட அவளால் "சா" வை தவிர வேற வார்த்தைகள் பேச முடியவில்லை. 
காதில் I-Pod இருந்தாலும் அவளுக்கு அதில் ஒரு பாடலும் கேட்கவில்லை 

காதில் இருந்த earphone ஐ மெல்ல கழட்டினாள், எதோ சொல்ல போகிறாள் என நினைத்தேன், ஆனால் எதுவும் சொல்லாமல் குனிந்துவிட்டாள். அவளால் என்னை புறகணிக்க முடியவில்லை அதே நேரம் பேசவும் முடியவில்லை. ஆறு வருடத்திற்கு முன்னால் இருந்த அந்த நட்பு, அந்த சுதந்திரம் இல்லை. எனக்கும் அதே நிலைமை தான், எல்லாவற்றிக்கும் காரணம் என் கடைசி வருட சுற்றுலா, அதிலும் இறுதி நாள் நடந்த Campfire .

"எறிந்தது விறகுகள் மட்டுமல்ல என காதல் சிறகுகளும் தான் "

பல வருடங்கள் கழித்து ஒரு கவிதை மீண்டும் அவளால். 

மூன்று வருடங்களுக்கு முன்னால், எல்லோரும் கல்லூரி வாழ்கையை துறந்து கார்பரேட் வாழ்கையை நோக்கி பொய் கொண்டிருந்த சமயம், கல்லூரியின் இறுதி ஆண்டு. நண்பர்களுடன் இறுதி சுற்றுலா. என் வாழ்கையை வதம் செய்த இடம் மூனார்.

அன்று ட்ரைனில் ஆரம்பித்த நட்பு இந்த சுற்றுலா வரை நீடித்தது, காலேஜ் கேண்டீன், சினிமா, பீச், ஸ்பென்சர், மகாபலிபுரம், சத்யம் தியேட்டர் என சென்னையில் எங்கள் இருவரின் பாதங்கள் பதியாத இடமே இல்லை.

கல்லூரியில் எங்களுக்குள் இருந்த நட்பை பற்றி அரசல் புரசலாக பேச்சு அடிபட்டாலும் அதை பற்றி ஒன்னும் தெரியாதது போல் நடந்தேன். அவள் என்னை பற்றி எப்படி நினைத்தாளோ தெரியவில்லை ஆனால் நான் ஆவலுடன் இருந்த ஒவ்வொரு நிமிடமும் நான் தவம் செய்யாமல் கிடைத்த வரம். என் சந்தோசம் அந்த இறைவனுக்கே பிடிக்கவில்லை போல, தவம் செய்யாமல் கிடைத்த வரமல்லவா ?

ஓர் அழகான ரோஜா தோட்டத்தில் ஒரு அழகான தென்றல் வீசுவது போல் என் காதலை சொல்ல ஒரு தருணத்தை எதிர் பார்த்துகொண்டிருக்கும் பொது கொழுந்துவிட்டு எரியும் காட்டுதீ போல் என் வாழ்வில் நடந்த அந்த Camp Fire. கல்லூரியின் கடைசி ஆண்டு, கடைசி சுற்றுலா, கடைசி பார்ட்டி, கொஞ்சம் விஸ்கி இதெல்லாம் கூட என்னை எதுவும் செய்யவில்லை. அந்த Camp Fire இல் பாடல் ஒலிக்க அனைவரும் ஆட, அவளும் ஆட ஆரம்பித்தாள், இரண்டு round விஸ்கி உள்ளே சென்று இருந்தாலும் அதில் கிடைக்காத போதை அவள் ஆட்டத்தில் கிடைத்தது. 

"மச்சான் சதீஸ் உன் ஆளு பின்னி பெடல் எடுக்குறா" என்ற விமர்சனத்துடன் அடுத்த ரௌண்டுக்கு தயாரானேன் 

அப்போது தான் பிரவீன் ஆட்டதுக்குள் நுழைந்தான். யார் இந்த பிரவீன் என்று கேட்பர்வகளுக்கு, "அவனை பற்றி பெருசா சொல்ல எதுவுமே இல்ல தமிழ்நாட்டுல ஏன் இந்தியாவிலே எந்த ஒரு காலேஜ் போனாலும் அங்க ஒண்ணுக்கும் உதவாத, எதுவுமே தெரியாத, ஆனா பக்காவா சீன் போடுற ஒருத்தன் இருப்பான் அவன் தான் இந்த பிரவீன்"
ஹரிதா உடன் அவன் சேர்ந்து ஆட விஸ்கியுடன் சேர்ந்த எனது இரத்தம் Campfire நெருப்பை விட அதிகமாக  கொத்திக்க ஆரம்பித்தது. " டேய் மாப்பு என்னடா இது எந்த நாய அடிச்சு துரத்து டா" என சிலர் ஏத்தி விட ஏன் வாழ்வின் மிக பெரிய தவறை செய்ய முற்பட்டேன்.தெருவில் நாம் செல்லும் போது ஒரு நாய் கடிக்க வந்தால் நாயை விட்டு தூர விலகுவது சாமர்த்தியமா அல்லது நாயை துரத்த கல்லை தேடுவது சாமர்த்தியமா

இதை தான் நானும் செய்தேன், நேராக களத்தில் இறங்கி அவள் கையை பிடித்தேன் அவள் நானும் ஆட வருகிறேன் என நினைத்து சிரிக்க அவளை பிடித்து அந்த இடத்திலிருந்து கூட்டி வந்தேன், இதை சுற்றி நிற்பவர்கள் அனைவரும் ஒரு மாதிரியாக பார்க்க அவளுக்கு சற்று கோபம் வந்து விட்டது. 

அன்று நடந்த வாக்குவாதத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை

நான் அவள் கையை பிடித்து இழுத்து செல்ல 

"ஏய் என்ன பண்ற எல்லாரும் பாக்குறாங்க?"
"உனக்கு தான் என்ன செய்றேன்னு புரியல" 

"சதிஷ் என்ன பார்த்து பேசு தண்ணி அடிசுருக்கியா"
"அது இப்போ முக்கியம் இல்ல, உன் கூட ஆடிகிட்டு இருந்தானே அவன் என்னை விட ஜாஸ்தியா அடிச்சுருக்கான், தெரியுமா ?"

"அதுக்கு இப்படியா புடிச்சு இழுத்துட்டு வருவ, அதை விடு இது என்ன புது பழக்கம் தண்ணி அடிக்கிறது"
"சுத்தி சுத்தி அங்கேயே வராத, இன்னும் கொஞ்ச நேரம் ஆடி இருந்தேனா அந்த நாய் எதாவது பண்ணி இருப்பான் "

"அவன் தண்ணி அடிச்சுருக்கான் அப்பிடின்னு நீ சொல்ற நீ மட்டும் ரொம்ப ஒழுங்கா,, என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்"
"கிழியும் அதான் பார்த்தேனே"

"என்ன பார்த்த சும்மா தண்ணி அடிச்சுட்டு ஒளர வேண்டியது "
"என்ன எப்போ பார்த்தாலும் தண்ணி அடிக்கிறேன் தண்ணி அடிகிறேன்னு சொல்ற ஏன் இஷ்டம் நான் தண்ணி அடிக்கிறேன் உனக்கு என்ன பிரச்சனை "
"அப்பிடியா அதே மாதிரி தான் நான் எப்படி வேணாலும் ஆடுவேன் உனக்கு என்ன பிரச்சனை நீ யாரு அத பத்தி கேக்குறது"
"நான் யாரா? இவ்வோளோ நாளா ........ நான் நம்மள பத்தி என்னனமோ "


"என்ன சொல்ற ஒன்னும் புரியல "
"உங்களுக்கு எல்லாம் எப்படி புரியும், புரியிற மாதிரி சொல்றேன் உன்னை எப்போ பார்த்தேனோ அப்பவே முடிவு பண்ணிட்டேன் நீ தான் என் வாழ்கைன்னு, உன் கூட பழகினினதுகப்பரம் தான் நான் எடுத்த முடிவு எவ்வளோ சரின்னு தோணிச்சு, இதை ஒரு நல்ல சமயம் பார்த்து சொல்லலாம்னு நெனச்சேன், உன் மனசிலையும் துளி அளவு என் மேல ஒரு impression இருக்கும்னு ....
ச்சே இன்னிக்கி பார்த்து....  இப்போ சொல்லு நான் பண்ணுனது சரியா தப்பா"


எவ்வளவு நேரம் என் வார்த்தைக்கு ஒரு விநாடி கூட இடைவெளி விடாமல் சண்டை போட்டு கொண்டிருந்தவள் சற்று மௌனமானாள். 


"அன்று இறைவன் என்னிடம் கொடுத்த வரத்தை பிடிங்கிக்கொண்டான் 
அலை போல் வேச வேண்டிய கடலை புயலாக மாற்றி விட்டேன்
அழகாக சொல்ல வேண்டிய காதலை ஆக்ரோஷத்துடன் சொல்லி விட்டேன் 


இதற்க்கு தான் உனக்கு இந்த வரமா ??"


கொஞ்ச நேரம் கழித்து 
"இவ்வோளோ நாள் இப்படிதான் என் கூட ..." என் கூட பேச விருப்பமில்லாமல் விலகிச்சென்றாள்.
என்னிடம் அவள் பேசிய கடைசி வார்த்தைகள். அந்த சம்பவம் நடந்த பின்பு அவள் என்னிடம் பேசவே இல்லை, எனக்கோ நான் எதோ பெரிய தவறு செய்தது போல் குற்ற உணர்ச்சியில் அவளை பார்ப்பதை தவிர்த்தேன். இதற்கு ஏற்றாற்போல் Campus Interview பரீட்சை என என்னை வேறு விஷயத்தில் ஈடுபடுத்திக்கொண்டேன். அவளுக்கு இன்போசிசில் வேலை கிடைக்க நான் கடைசி வரை எந்த வேலையும் கிடைக்காமல் கல்லூரியை விட்டு வெளியேறினேன். அவளை பார்க்க கூடாது என நினைத்து farewell party கூட செல்லாமல் தவிர்த்துவிட்டேன். 

Farewell Party சென்ற நண்பர்கள் அவள் என்னை கேட்டதாக சொன்னது இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது, ஆனால் அப்போது பசங்க சும்மா ஓட்டுறாங்க என நினைத்து அதை பெருசாக எடுக்கவில்லை.

"சார் மவுண்ட் ஸ்டேஷன், இறங்குங்க!!! அப்புறமா வெளிய நின்னு யோசிங்க" ஒரே வரியில் ஆறு வருஷத்திற்கு முன்னால் இருந்த என்னை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தான்.
நான் கீழே இறங்கி இருபது ருபாய் கொடுத்துக்கொண்டிருக்கும்போது அவளை நோக்கினேன் அவளும் என்னை பார்த்தாள்
"எப்படி இருக்கே " என வினவினாள்
"ஏதோ உயிரோட இருக்கேன் " என்றேன். ஏன் அப்படி ஒரு பதிலை சொன்னேன் என இன்று வரை எனக்கு புரியவில்லை, ஒரு வேலை பிளாஷ் பாக் effect ன்னு நினைக்கிறன் 

அப்போது அவளிடம் இந்த இடம் ஞாபகம் இருகிறதா இங்கு தான் நாம் முதலில் பேச ஆரம்பித்தோம் என சொல்ல நினைத்தேன், ஆனால் மனதில் ஒலித்த குரல் மனதிற்குள்ளே மறைந்தது 

"காலேஜ் Farewell Party க்கு கூட நீ வரல.. எங்க போன இவ்வோளோ நாளா ?"
"இல்ல கொஞ்ச நாள் பெங்களூர்ல இருந்தேன் அப்புறம் Onsite ஒரு 18 months , இரண்டு வாரம் முன்னாடி தான் வந்தேன்"
"நீ New Jersey போயிருந்த கரெக்டா ? நான் facebook ல pics பார்த்தேன்"
"ஆனா நீ என் Friends List ல இல்லேயே"
"உன் Friends Listla இருந்தா தான் பார்க்க முடியுமா, mutual Friends இருந்தாலும் பார்க்கலாம் தெரியுமா"

இதுல இப்படி ஒரு உள்குத்து இருப்பதை மறந்து போனேன்

"சரி டிக்கெட் எடுத்துட்டு வரேன் " என்றேன் 
"இல்ல எனக்கு டைம் ஆச்சு ட்ரைன் வந்துடும்.. உன் ஆபீஸ் எங்க ?"
"நுங்கம்பாக்கம் Haddows ரோடு"
"என் ஆபீசும் அங்க தான் இருக்கு "Scope International"" உன் ஆபீஸ் எங்க ?"

"அங்க தான் Pycrofts Garden ரோட்ல Keane India  கேள்வி பட்டுரிக்கியா "
"ஹ்ம்ம் தெரியும்... சரி உன் நம்பர் கொடு கால் பண்றேன் ஒரு முக்கியமான விஷயம் ரொம்ப நாளா உன்கிட்ட சொல்லனும்னு நினைச்சேன் ஆனா உன்னை பிடிக்கவே முடியல "

என் நம்பரை அவள் செல் போனில் ஸ்டோர் செய்தாள், மீண்டும் என்னக்குள் ஒரு குரல் 

"அவள் ஒவ்வொரு செல்லிலும் செல்ல வேண்டிய நான் - இறுதியாக 
 அவள் செல் போனில் நம்பர்ஆக போய் சேர்ந்தேன் "

மீண்டும் சந்திப்போம் என விடைபெற்றாள். அப்போது தான் ஞாபகம் வந்தது என் நம்பரை கொடுத்தேன் அவள் நம்பரை வாங்க மறந்துவிட்டேன்.  என் செல் போன் நம்பருக்கும் என் இதயத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை இரண்டையும் அவளிடம் கொடுத்தேனே தவிர அவளிடம் இருந்து பதிலுக்கு எதுவும் வாங்கவில்லை.

அவளை சந்தித்து இரண்டு நாட்களுக்கு பின்பு அவள் என்னை அழைத்தாள், அந்த அழைப்பு வரும் வரை என் செல் போனில் நான் ஒரு அழைப்பை கூட தவற விட்டதில்லை, கிரெடிட் கார்டு அழைபில்லிருந்து காலர் டியுன் அழைப்பு வரை எதையுமே தவற விடவில்லை. ஏன் பல மீட்டிங்யில் இருந்து வெளி நடப்பு செய்து செல்போன் அழைப்பை எடுத்ததுண்டு.

இறுதியாக அன்று "சதீஷ் இன்னக்கி சாயங்காலம் மீட் பண்ணலாமா ஒரு முக்கியமான விஷயம் பேசணும்", காதில் தேண் வந்து பாயும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அன்று அதை முதல் முறையாக அனுபவித்தேன். 

இருவரும் காபி டே வில் சந்தித்தோம், அந்த சந்திப்பு என் வாழ்வை மாற்றிய சந்திப்பு

அழகான ஒரு வெள்ளை சுடிதாரில் எனக்கு முன் வந்து அமர்ந்தாள். 

"வந்து ரொம்ப நேரம் ஆச்சா ?" என்றாள்
"இல்லை இப்போ தான் ஒரு பத்து நிமிஷம் இருக்கும்"

உனக்காக இத்தனை வருஷம் காத்திருந்த எனக்கு இந்த பத்து நிமிஷம் ஒரு பெரிய விஷயமே இல்லை. என சொல்லலாம் என்று தோன்றியது.அவள் ஏதோ ஒரு இட்டாலியன் காபி ஆர்டர் செய்ய நான் வழக்கம் போல் ஐஸ் டீ சொன்னேன். என்னதான் அவள் என்னுடன் சகஜமாக பழகினாலும் என்னால் அந்த campfire சம்பவத்தை மறக்கமுடியவில்லை அதே நேரம் அதை மறைக்கவும் முடியவில்லை 

"சதீஷ் அன்னைக்கும் பார்த்தேன் இப்போவும் பார்க்குறேன் ஏன் முகத்தை எங்கயோ திருப்பி வச்சுக்கிட்டு பேசுற, நம்ம டூர்ல நடந்த விஷயத்த இன்னுமா நினைச்சுகிட்டு இருக்க ?"

"கரெக்டா கண்டுபுடிச்சிட்டா" என நினைத்துக்கொண்டு " அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை இத்தனை நாள் கழிச்சு உன்னை மீட் பண்ணுவேன்னு நான்....." வார்த்தைகள் தடுமாறின 

"இன்னும் பழசெல்லாம் நீ மறக்கல?  நானும் அன்னக்கி கொஞ்ச கோபபட்டுடேன், நீ வேற அன்னைக்கி  தெளிவாயில்லை , பரவாயில்லை அதேயே ஏன் யோசிச்சுகிட்டு" 
நான் அன்று செய்த தவறுக்கான தண்டனை முடிந்தது என தோன்றியது அவளுடன் சற்று சகஜமாக பேச ஆரம்பித்தேன், இட்டாலியன் காபி மற்றும் ஐஸ் டீ உடன் பழய கல்லூரி நண்பர்கள், ஆபீஸ் தோழர்கள் அமெரிக்க அனுபவம் எல்லாம் வந்து சென்றது. அமெரிக்காவில் இருந்து கொண்டு வந்த சாக்லேட்யில் சிலவற்றை அவளிடம் கொடுத்தேன், அதில் அவளுக்கு  மிக பிடித்த டார்க் சாக்லேட்டும் அடக்கம். அதை பார்த்த உடன் 
"நீ இன்னும் மறக்கல கரெக்டா எனக்கு புடிச்ச டார்க் சாக்லேட் வாங்கிட்டு வந்துருக்க"

காபி டேவிலுருந்து கிளம்பினோம், நுங்கம்பாக்கத்தில் Wallace Garden ரோட்டில் நடக்க ஆரம்பித்தோம், சென்னையின் மைய பகுதியான நுங்கம்பாக்கத்தில் இப்படி ஒரு அமைதியான சாலை, ஒரு வாய்ப்பு கிடைத்தால் சென்று பாருங்கள் Wallace Garden குறுக்கு தெரு. 

"இங்க ஒரு பெரிய பார்க் இருக்கு பார்த்திருக்கியா" என கேட்டேன் 
"பார்க்கா இங்கயா, எப்படி போனும் " 
"பக்கம் தான் 5 minutes walk, வா போலாம் " என்றேன் 
அமைதியான அந்த பூங்காவினுள் நுழைந்தோம், எங்களை தவிர அந்த பூங்காவினுள் இரண்டு காதல் ஜோடி ஓரமாக வெயிலுக்கு பயந்து நிழலில் மறைதிருந்தந்து.

"இங்க இப்படி ஒரு பார்க் இருக்கா, எனக்கு தெரியவே தெரியாது, நீ தினமும் வருவ போல, ஹ்ம்ம் யார்கூட ?"
"அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது, நான் இந்த சென்னை ஆபீஸ் ஜாயின் பண்ணியே மூணு நாள் தான் ஆச்சு, நேத்து தான் இந்த பக்கம் வரும் போது பார்த்தேன்" 

"அப்பாடி இப்பவாது சிரிச்சியே, அன்னக்கி உன்னை ஆட்டோல பார்த்ததிலிருந்து இன்னக்கி காபி டே வரைக்கும் எதையோ பறிகொடுத்த மாதிரி இருந்த, இப்போதான் நார்மலா பேசுற, இன்னும் கவிதையெல்லாம் எழுதுறியா? இன்ஸ்டன்ட் கவிதையெல்லாம் சொல்லுவியே ஒன்னு சொல்லு பார்போம் "

"அத விட்டு ரொம்ப நாள் ஆச்சு, அன்னக்கி நடந்த விஷயம் .... என்னால எதுவுமே யோசிக்க முடியல "

"இன்னும் ஏன் அதேயே பேசிகிட்டு இருக்கே, நான் தான் மறந்துட்டேன்னு சொல்லுறேன்ல, அன்னைக்கு தண்ணி அடிச்சுட்டு நீ ஏதேதோ பேசிட்டே, இன்னும் அதேயே யோசிச்சிகிட்டு இருக்காத " 

"உனக்கு இன்னும் புரியலையா இல்லை புரியாத மாதிரி நடிக்கிறியா ? அன்னைக்கி நான் தண்ணி அடிச்சிருந்தேன் ஒத்துக்கிறேன், ஆனா நான் பேசுனது எல்லாமே உண்மை, இத்தனை நாள் எத்தனையோ பொண்ணுங்கள பார்த்துருக்கேன், ஆனா உன்னை மாதிரி யாரையும் பார்த்ததில்லை, இன்னக்கி காபி டேல என் முகத்தை வச்சே நான் என்ன மனுசுல என்ன ஓடுதுன்னு கண்டு புடிச்சே!!! சத்தியமா சொல்றேன் எந்த பொண்ணும் என்னை இந்த அளவு புரிஞ்சுகிட்டது கிடையாது. அன்னைக்கி உன்னை ஆட்டோவில பார்த்துக்கு அப்புறம் என்னை அறியாமலே கவிதை சொல்ல ஆரம்பிச்சேன். அன்னைக்கி நான் என் காதலா சொன்ன விதம் வேணா தப்பா இருக்கலாம் ஆனா இன்னக்கி வரைக்கும் உன்னை தவிர இன்னொரு பொண்ண என்னால யோசிச்சுக்கூட பார்க்க முடியாது." 

நான் என்னை மறந்து பேசிகொண்டிருக்க அவள் சற்று விலக ஆரம்பித்தாள், வாழ்கையில் அவளை மறுபடியும் இழக்க எனக்கு மனமில்லை அவள் அருகில் சென்று அவள் கையை பிடித்தேன், அவள் கண்களை நோக்கினேன் கண்ணிர் நிரம்பி இருந்தது, மீண்டும் பேச ஆரம்பித்தேன்.

"என் வாழ்கையில உன்னோட impact இவ்வோளோ இருக்கு, உன் life ல .... என்னை பத்தி நீ யோசிச்சதே கெடயாது நான் என்ன அவ்வளவு மோசமா"
"ப்ளீஸ் சதீஷ் இதுக்கு மேல பேசாத, நாம மீட் பண்ணி இருக்கவே கூடாது, என்ன பாக்கவே இல்லன்னு நினைச்சிக்கோ , நான் கிளம்புறேன்..." அவள் வார்த்தைகளும் தடுமாற ஆரம்பித்தது 

அவள் கரத்தை சற்று இறுக்கி பிடித்தேன் 
"இல்லை இன்னைக்கி ஒரு பதில் சொல்லிட்டு போ, அன்னைக்கி நீ எதுவுமே சொல்லாம போயிட்ட , அந்த மௌனத்தில் இருந்து வெளிய வரவே எனக்கு ரொம்ப நாள் ஆச்சு, மறுபடியும் ஒன்னும்சொல்லாம போனா எனக்கு பையித்தியம் புடிச்சுடும், எதாவது சொல்லு "
"என்ன சொல்ல சொல்லுற, உன் கவிதை எனக்கு பிடிக்காதுனு சொல்ல சொல்றியா, இல்ல உன்ன மாதிரி ஒருத்தன நானும் பார்ததில்லன்னு சொல்ல சொல்லுறியா  .... " அவள் கண்களில் நீர் தழும்ப அரம்பிதத்து 
அவள் கண்ணீரை மெல்ல துடைத்தேன், லேசாக குனிந்தேன் அவள் கண்ணிர் இன்னும் நிற்கவில்லை, அந்த தருணம், அந்த கண்ணிர், அந்த வார்த்தைகள் என்னை என்ன செய்ததென்று புரியவில்லை, அவள் இதழோடு இதழ் பதித்தேன், சில வினாடிகள் உலகம் இருண்டது, இத்தனை நாள் என் மனதில் இருந்த வலி,ஏக்கம், சோகம் எல்லாவற்றையும் இந்த சில வினாடிகள் மறக்கச்செய்தது, அவளும் என்னை தடுக்கவில்லை, பின்பு எதோ தோன்றியது போல் சட்டென்று விலகினாள்,

"வேண்டாம் சதீஷ்... இது தப்பு  இதுக்கு தான் நான் அப்பவே போறேன்னு சொன்னேன் "
"தப்பா!!!!  There was a lot of Love in that Kiss இதுல என்ன தப்பு இருக்கு"
"இது தான் தப்பு " என சொல்லி தான் கையில் இருந்த மோதிரத்தை காட்டினாள், ஆட்டோவில் நான் பார்த்து மயங்கிய அதே மோதிரம் 
"எனக்கு இரண்டு மாசத்துக்கு முன்னாடி தான் engagement ஆச்சு, அடுத்த வாரம் கல்யாணம், அதுக்கு Invite பண்ண தான் உன்னை இன்னக்கி கூப்பிட்டேன், ஆனா நீ காபி டேல ரொம்ப Upset ஆயிருந்த, அந்த நிலைமையில உன்கிட்ட இத எப்படி சொல்றதுன்னு புரியல, சரி கொஞ்ச நேரம் பேசினா நீ நார்மல் ஆகிடுவேன்னு தெரியும், ஆனா அதுக்குள்ள என்னனமோ நடந்துருச்சு" என சொல்லி கைபையில் இருந்து அழைப்பித்தழை எடுத்தாள்.

அமிழ்தத்தையும் விஷத்தையும் அடுத்தடுத்து குடிப்பது போல் இருந்தது " என்ன சொல்ற, இப்போ நீ என்ன Kiss பண்ணினது, நான் உன் வாழ்கையில ..... இது எல்லாமே முடிஞ்சுருச்சா ..." என்னால் பேச முடியவில்லை கண்ணில் நீர் நிரம்பியது 

"அப்படி மட்டும் நெனைக்காத, நீ என்னை பத்தி எப்படி நெனைசியோ அதே மாதிரி தான் நானும், அன்னிக்கி CampFire ஏன் என்னக்கு அவ்வளோ கோபம் வந்துச்சுன்னு புரியல, ஆனா எப்போ காலேஜ் விட்டு வெளிய வந்தேனோ அப்போதான் உன்னைபத்தி முழுசா புருஞ்சுகிட்டேன், அதுக்கு அப்புறம் நான் மீட் பண்ணின ஆம்பிளைங்க யாரும் உன் அளவுக்கு இல்லை, நான் எதாவது தப்பு செஞ்சா அது தப்புன்னு எதைபத்தியும் கவலைபடாம சொல்ற ஒரே ஆள் நீ தான், மத்தவுங்க எல்லாரும் எதாவது பண்ணி என்ன இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்றாங்க But none of them were true to themselves , நாம மீட் பண்ணி ஒரு மூணு நாலு வருஷம்  இருக்குமா? சத்தியமா இத்தனை வருஷமா உன்னை மாதிரி யாரையும் சந்திச்சதேயில்லை."

என்னால் எதுவும் பேச முடியவில்லை, அவள் தொடர்ந்தாள் " ஆனா கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் இவரை மீட் பண்ணினேன் அவர் பேர் ராம் கிட்ட தட்ட உன்ன மாதரியே very open minded ஏன் கவிதை கூட எழுதுவாரு. Arranged Marriage தான், but he is a very nice person. அவரோட என் வாழ்க்கை நல்லா இருக்கும்னு தோணிச்சு, வீட்லயும் எனக்கு பிடிச்சுருந்தா சரின்னு சொன்னங்க."

"அப்போ அவ்வோலோதான்னு சொல்றே !!! " என்றேன் தயக்கத்தோடு 
"ப்ளீஸ் சதீஷ் புருஞ்சிகோ... இதுக்கு மேல பேச என்னால முடியாது " என சொல்லி அழைப்பித்தழை நீட்டினாள்

அழைப்பித்தழை வாங்கிக்கொண்டு அவளை விட்டு நடக்க ஆரம்பித்தேன், அப்போது என்னை பார்த்து " சதீஷ், ப்ளீஸ் நடந்ததை மறக்க ட்ரை பண்ணு, என் கல்யாணத்துக்கு வருவல்ல ?"

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை திரும்பி அவளை பார்த்து " அதுக்கு நான் பேசாம செத்துறலாம்" .

எங்கேயாவது நின்று கத்தி அழவேண்டும், அந்த கட்டிடத்தின் பத்தாவது மாடியிலிருந்து குதிக்கவேண்டும், இறைவன் என்ற ஒருவன் இருந்தால் அவனை கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டும், இப்படி பட்ட மன நிலையில் அந்த பூங்காவைவிட்டு வெளியே வந்தேன், வெளியே வருவதற்கு முன் கடைசியாக ஒரு முறை அவளை திரும்பி பார்த்தேன், அவள் அந்த இடத்திலிருந்து நகரவே இல்லை, என்னை பார்த்துக்கொண்டே இருந்தாள். இது தான் ஹரிதாவை நான் பார்க்கும் இறுதி முறை.

---- பயணங்கள் முடிவதில்லை

பின்குறிப்பு இக்கதையில் வரும் பல சம்பவங்கள் கற்பனையே.. என் வாழ்விலும் என் நண்பர்கள் வாழ்விலும் நடந்த சில உண்மை சம்பவங்களும் இதில் அடக்கம்.  மேலும் இக்கதை முழுவதும் கூகுள் Transliteration மூலம் டைப் செய்யப்பட்டது, அதற்கு மேலாக இது என் முதல் சிறுகதை..... எழுத்துப்பிழை பல இருக்க வாய்ப்புள்ளதால் என்னை ரொம்ப திட்டிவிடாதிர்கள் . அடுத்த பகுதிகளுக்கான இணைப்புகள் 

1 comment:

  1. Good try Ragu..

    But u could also be careful in the timing... U have mentioned Dasavadharam song in the first part and starting 6 years later in the second part.. But Dasavadharam not yet completed Six years..

    But nice narration..

    ReplyDelete

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More