Links

தலைவா!!!

என் வாழ்வில் தலைவருடன் சில மறக்க முடியாத அனுபவங்கள் !!!!

Saturday, May 21, 2011

பயணம் - பகுதி 3 (இறுதிப்பகுதி )

பயணம் பகுதி 1 பயணம் பகுதி 2  பகுதி 3 இப்பொழுது  காலையில் அம்மா என்னை எழுப்பும் குரல், பின்னால் இன்னொரு சத்தமும் கேட்கிறது சன் டிவியில் "இந்த நாள் இனிய நாள்", இனிய நாள்!!! ஆம் இன்று ஹரிதாவின் திருமணம், கடந்த ஒரு வாரம் என்னால் ஒரு விஷயத்தில் கூட கவனம் செலுத்த முடியவில்லை, பணிக்கு இன்னொரு வாரம் விடுமுறை அறிவித்தேன், வீட்டில் எல்லோரும் எனக்கு எதோ உடம்பு சரியில்லை என நினைக்க, நானோ எதுவும் செய்ய முடியாமல் ஒரு மூலையில் உட்காந்திருந்தேன். இன்று எனக்கு இன்னொரு குழப்பம் அந்த திருமணத்திற்கு   செல்ல வேண்டுமா ? என் இதயத்தை கிழித்தெடுக்கும் நிகழ்வை காண வேண்டுமா? என் வாழ்வில் ஹரிதாவை மொத்தமாய் இழக்கும் காட்சியை பார்க்க வேண்டுமா...

Friday, May 20, 2011

பயணம் - பகுதி 2

பயணம் பகுதி 1 பகுதி 2:  ஆறு வருடங்கள் கழித்து  காலை 9 மணி  இன்று இந்தியாவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் எல்லோருக்கும்  இருக்கும் ஒரு கனவு, சொல்ல போனால் பலருக்கு இன்னும் கனவாகவே இருக்கும் ஒரு காரியத்தை இப்போது தான் முடித்தேன். ஆம் பதினெட்டு மாதம் கடல் கடந்து எதோ ஒரு அமெரிக்க நிறுவனத்துக்கு தினக்கூலி செய்து முடித்துவிட்டு இந்தியா திரும்பினேன். கொஞ்சம் ஸ்டைலாக சொல்ல வேண்டுமானால் onsite இல் இருந்து திரும்பி வந்து ஒரு வாரம் ஆகிறது.  கடல் கடந்து செல்லும் போது ஏதோ ஒரு பெரிய விஷயம் நமக்காக காத்திருப்பது போல இருக்கும், அனால் அங்கு சென்ற பின்பு தான் தினம் தினம் கட்டிட வேலை செய்யும் கொத்தனாருக்கும்...

பயணம் - பகுதி 1

பகுதி 1  - அன்றொரு நாள்காலை 7:30 மணி  ஏனோ தெரியவில்லை அன்று காலை நடந்த சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்த மாதிரியே இருந்தது. நான் எப்பொழுதும்  காலையில் தாமதமாகத்தான் எழுந்திருப்பேன், ஆனால் அன்றோ மிகவும் தாமதமாகிவிட்டது, எழுந்து பல் தேய்க்க சென்ற போது தான் பேஸ்ட் தீர்ந்துவிட்டதை அறிந்தேன், பின்பு அருகில் இருக்கும் கடையில் சென்று வாங்கி வருவதற்குள் இன்னும் நேரம் விரயமானது. இவ்வாறு நடந்த எல்லா நிகழ்வுகளாலும் வழக்கமாக 6:45 கல்லூரிக்கு கிளம்பிவிடும் நான் 7:15 ஆகியும் இன்னும் வீட்டைவிட்டு கிளம்பாமல் இருந்தேன். இறுதியாக வீட்டைவிட்டு வெளியே வரும்போது செல்போன் எடுக்க மறந்து விட்டது ஞாபகம் வந்தது, வீட்டிற்குள் வந்து பார்த்தால்...

Pages 51234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More